இன்னும் 45 நாட்களில் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜாதி ராஜ வாழ்க்கை

Jupiter Transit 2024: 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்திற்கு அதிபதி குரு ஆவார். அதன்படி இன்னும் 45 நாட்களில் குரு பகவான் தனது ராசியை மாற்றப் போகிறார். இதனால்  எந்த ராசிகளின் அதிர்ஷ்டம், பண வரவு கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்.

Guru Peyarchi Palangal, Jupiter Transit 2024: ஜோதிடத்தின் படி நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக விழாயன் கருதப்படுகிறது. அந்த வகையில் குரு கிரகத்தின் (Guru Gochar 2024) பெயர்ச்சியானது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும். இந்நிலையில் இன்னும் 45 நாட்களில் அதாவது மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசியில் (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, பண வரவு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் என்று பார்ப்போம்.

1 /6

மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி நன்மை பயக்கும். பண பலன்களை தரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். நீதிமன்ற தீர்ப்புகள் சாதகமான பலனைத் தரும். வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும்.  

2 /6

ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி அபரிமிதமான பலன் கிடைக்கும். வெற்றிகள் குவியும். தொழில் சாதகமான பலன் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகள் பெறலாம். புதிய தொழில் தொடங்க சாதகமான நேரம். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும்.  

3 /6

மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி சுப பலனைத் தரும். வாழ்க்கையில் வெற்றியை அனுபவிக்க முடியும். பொருளாதார நிலை மேம்படும். முதலீடு மூலம் லாபம் பெறலாம். திடீரென்று எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.  

4 /6

சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சி சுப பலன்களைப் பெறலாம். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பெறலாம். இளைய அதிகாரிகள் ஒத்துழைக்கலாம். மரியாதை கூடும், திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.   

5 /6

கன்னி ராசிக்கு குரு பெயர்ச்சி கல்வி மற்றும் தொழிலில் வெற்றியைத் தரும். வேலை செய்பவர்கள் பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். தொழில் வல்லுநர்கள் நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் பெறலாம். போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம்.  

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.