இன்னும் 43 நாட்களில் குரு பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்கள் பாடாய் படுவார்கள்

Jupiter Transit: மேஷ ராசியில் பயணித்து வரும் குரு வரும் மே மாதம் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இன்னும் 43 நாட்களில் ராசியை மாற்றப் போகும் குருவால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிரமங்கள், பண தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

Jupiter Transit 2024, Guru Peyarchi: குரு இன்னும் 43 நாட்களில் அதாவது மே 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசியில் (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு சிரமங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக பண கஷ்டம், தொழிலில் நஷ்டம் ஏற்படக்கூடும். மேலும் சில ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

1 /6

நாள்: சித்திரை 18, 2024 (பகல் 1 மணி) ராசி: மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆண்டு: குரோதி ஆண்டு  

2 /6

குரு 8ம் வீட்டில் இருப்பவர்களுக்கு சவால்கள், தடைகள், கவனக் குறைவு போன்றவை ஏற்படும். குரு 12ம் வீட்டில் இருப்பவர்களுக்கு: செலவுகள், லாபம் குறையக்கூடும்.

3 /6

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் சாதகமான பலன் கிடைக்காது. நிதி நிலையில் மாற்றம் ஏற்படலாம். நிதி இழப்பு ஏற்படலாம். எதிர்மறையாக உணர்வீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். உடல்நிலையும் மோசமடையலாம்.

4 /6

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் சில பண கஷ்டங்கள் ஏற்படலாம். சாதகமான பலன் கிடைக்காது. நிதி நிலை மேசமடையலாம். தாழ்வுகள் இருக்கலாம். வாழ்க்கையில் சவால்களை சந்திக்க நேரிடலாம். தடைகள் வரலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை.

5 /6

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் பெரிய பலன் கிடைக்காது. உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் வரலாம். நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். செலவுகள் அதிகரிக்கும். மன அழுத்தம் ஏற்படும்.

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.