குரு பெயர்ச்சி பலன்கள்... ‘இந்த’ ராசிளுக்கு நாளை முதல் பொற்காலம் ஆரம்பம்..!

Guru Peyarchi Palangal: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில், தற்போது மேஷ ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான் மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிகளின் பொற்காலம் ஆரம்பம் என்கின்றனர் ஜோதிடர்கள்.

தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான், மே மாதம் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 16ம் தேதி கிருத்திகை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியானார். கிருத்திகை நட்சத்திரம் சூரியன் ஆட்சி செலுத்தும் நடத்திரம். குரு பகவான் சூரியக் கடவுளின் நட்பு கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

1 /8

தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து விலகி மதியம் 1:50 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.  மே மாத குரு பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். வேலை, தொழில், அரசியல் என அனைத்திலும் அவர் கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். செல்வ வளம் கூடும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.  

2 /8

மேஷம்:  குரு பெயர்ச்சி மேஷ ராசிகளுக்கு சாதகமாக இருக்கும். வேலையில், தொழிலில் இருப்பவர்கள் தங்கள் துறையில் சிறப்பாக செயல்பட முடியும். ஆளுமை மேம்படும். நல்ல அதிர்ஷ்டம் பெருகும். காதல் மற்றும் திருமண வாழ்வில் உங்கள் உறவுகள் இனிமையாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும்.  

3 /8

ரிஷபம்: குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்கு தான் சஞ்சரிக்க போகிறார். இது உங்களுக்கு சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். புதிய வாகனம் வாங்கலாம் அல்லது வெளியூர் பயண கனவு நிறைவேறலாம். மே 1 க்குப் பிறகு, வங்கிக் கடனின் சுமை குறையத் தொடங்கும், ஏனெனில் உங்கள் நிதி நிலைமை மேம்பட்டு கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிப்பீர்கள். 

4 /8

மிதுனம்: குரு பெயர்ச்சி மிதுன ராசிகளுக்கு முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளை உருவாக்கும். திருமணம் கை கூடி வரலாம் அல்லது உங்கள் காதல் வாழ்க்கையை தொடங்க ஒரு துணையை நீங்கள் காணலாம். நீங்கள் விரும்பினால், நீங்கள் சில புதிய வேலையைத் தொடங்கலாம், அதில் உங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் செல்லலாம். அது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும்.

5 /8

சிம்மம்: குரு பெயர்ச்சியினால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு லாபத்திற்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும். வேலை சம்பந்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்களின் பெயரும் புகழும் உயரும். 

6 /8

துலாம்: குரு பெயர்ச்சியினால் துலாம் ராசிகள் ஆதாயம் அடைவார்கள். உங்கள் வேலையை விரிவுபடுத்துவதில் வெற்றி பெறலாம். மே 1 முதல், நீங்கள் உங்கள் தொழிலில், வேலையில் வருமானம் அதிகரிக்கத் தொடங்கலாம், மேலும் முன்னேற உங்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அசையும் அல்லது அசையா சொத்தை வாங்கலாம் அல்லது முதலீடு செய்யலாம். இது உங்கள் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

7 /8

தனுசு: குரு பெயர்ச்சி தனுசு ராசிகளுக்கு மாற்றத்தை கொண்டு வரும். உங்கள் மனம் வழிபாடு மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபடும். வெளிநாட்டில் படிக்கும் எண்ணம் உள்ளவர்களுக்கும், உயர்கல்வி பெற நினைப்பவர்களுக்கும் நேரம் சாதகமாக உள்ளது. வேலை தேடும் உங்கள் முயற்சி வெற்றி பெறலாம். நீதிமன்ற வழக்குகளில் புதிய  முன்னேற்றம் ஏற்படும். அது சாதகமானதாக இருக்கும். 

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.