மழை காலத்தில் கார் ஓட்டும்போது ரொம்ப ரொம்ப கவனம்... கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்!

Car Tips In Rainy Season: மழைகாலத்தில் கார் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் குறித்தும், பராமரிப்பு முறைகள் குறித்தும் இதில் விரிவாக காணலாம்.

  • Dec 06, 2023, 17:48 PM IST

கார் வைத்திருப்பவர்கள் இந்த 5 டிப்ஸ்களை மழை காலத்தில் நிச்சயம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 

 

1 /7

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வரலாறு காணாத மழையால் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். டிசம்பர், ஜனவரி மாதங்களில் மழை பெய்வது வழக்கம். 

2 /7

எனவே, நீங்கள் கார் வைத்திருப்பவராக இருந்தால் விபத்தில்லாமல் பாதுகாப்பான பயணத்திற்கு, இந்த 5 டிப்ஸ்களை மழை காலத்தில் நிச்சயம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

3 /7

கார் வைப்பர்கள் (Wiper) கவனித்துக் கொள்ளுங்கள்: மழைக்காலம் வரும்போது வைப்பர்கள் மிகவும் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். அவை கண்ணாடியில் படியும் அழுக்கு மற்றும் தண்ணீரை அகற்ற உதவுகின்றன. எனவே, மழை பெய்தவுடன் உடனடியாக வைப்பர்களை சுத்தம் செய்வது மிக மிக முக்கியம்.  

4 /7

ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்களை சரிபார்க்கவும்: கனமழை பெய்யும் போது, காரின் ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். அவை இருட்டான பாதைகளில் உங்களுக்கு வெளிச்சம் காட்டுவது மட்டுமின்றி மற்ற ஓட்டுனர்களுக்கும், குறிப்பாக எதிரில் வரும் ஓட்டுநர்களுக்கும் தெரியவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   

5 /7

காரின் வெளிப்புறத்தை சுத்தம் செய்யுங்கள்: மழைக்காலத்தில், கார்களில் அழுக்கு, சேறு ஆகிய அடித்து மிகவும் சுகாதாரமற்ற வகையில் காணப்படும். இது வாகனத்தின் வெளிப்புறத்தை மொத்தமாக பாதிக்கும். எனவே, மழைநீர் விட்டுச் செல்லும் அந்த அமிலப் படிவுகளின் அரிக்கும் விளைவுகளைத் தணிக்க, நீரை பயன்படுத்தி உங்கள் காரைத் தொடர்ந்து சுத்தம் செய்வது முக்கியம்.  

6 /7

பிரேக்கிங் சிஸ்டத்தை சரிபார்க்கவும்: வாகனம் ஓட்டும்போது எந்தவிதமான ஆபத்தையும் தவிர்க்க, மழைக்காலங்களில் காரின் பிரேக்கிங் சிஸ்டத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். இதுதான் மிக மிக முக்கியமாகும். ஈரமான சூழல்கள் பெரும்பாலும் பிரேக்குகளை பாதிக்கின்றன. இதனால், விபத்து கூட ஏற்படலாம்.   

7 /7

டயர்களைச் சரிபார்க்கவும்: கனமழை அடிக்கடி சாலைகளை வழுக்கலாம் மாற்றும். மேலும், சாலைகளில் கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தும். எனவே, கார்களின் டயர்களைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தேய்ந்து போன டயர்களை மாற்றுவது ஹைட்ரோபிளேனிங் சிக்கலைச் சமாளிக்க உதவும்.