அக்டோபரில் கார்களை அதிகம் விற்ற நிறுவனங்கள்... ஒரு வருஷத்தில் வளர்ச்சியை பாருங்கள்!

Car Sales In October 2023: கடந்த அக்டோபர் மாதம் இந்திய வாகனச் சந்தையில் அதிகம் விற்பனையான கார் நிறுவனங்களை இங்கு காணலாம். மேலும், 2022ஆம் ஆண்டில் இதே அக்டோபர் மாதத்தில் எவ்வளவு விற்பனையானது என்பதை இந்தாண்டுடன் ஒப்பிட்டும் பார்க்கலாம்.

  • Nov 09, 2023, 00:12 AM IST
1 /7

7. ஹோண்டா: ஹோண்டா நிறுவனம் இந்தாண்டு அக்டபோரில் 9,400 யூனிட்களை விற்றுள்ளது. இந்தாண்டு அக்டோபரில் 9,861 யூனிட்களை விற்ற நிலையில்ஸ, அடுத் மாதத்திலேயே 4.7% வீழ்ச்சியை கண்டுள்ளது. மேலும், கடந்தாண்டு அக்டோபரில் ஹோண்டா 9,543 யூனிட்டுகளை விற்றுள்ள நிலையில், கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 1.5% சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது.   

2 /7

6. டொயோட்டா: இந்நிறுவனம் இந்தாண்டு அக்டோபரில் 20,542 யூனிட்களை விற்றுள்ளது. ஆனால், கடந்தாண்டு இதே அக்டோபரில் 13,143 யூனிட்களைதான் விற்றது. இது சுமார் 56.3% வளர்ச்சியாகும். ஆனால், இந்தாண்டு செப்டம்பரில் டொயோட்டா 22,168 யூனிட்களை விற்றது. இது அக்டோபரில் 7.3% சரிவாகும்.   

3 /7

5. கியோ: இந்த நிறுவனம் மொத்தம் இந்தாண்டு அக்டோபரில் 24,531 யூனிட்களையும், கடந்தாண்டு அக்டோபரில் 23,323 யூனிட்களையும் விற்றது. அதன்படி 4.4% வளர்ச்சியாகும். குறிப்பாக இந்தாண்டு செப்டம்பரில் 20 ஆயிரத்து 22 யூனிட்டுகளை விற்ற கியா நிறுவனம் இந்த மாதம் 21.6% வளர்ச்சியை கண்டுள்ளது.   

4 /7

4. மகேந்திரா: இந்த நிறுவனம் நடப்பாண்டு அக்டோபரில் 43,708 யூனிட்களையும், கடந்தாண்டு அக்டோபரில் 32,186 யூனிட்களையும் விற்றுள்ளன. இதில், 35.8% வளர்ச்சி. கடந்த செப்டம்பரில் 41,267 யூனிட்டுகளை விற்று 5.9% வளர்ச்சியையும் பெற்றுள்ளது.   

5 /7

3. டாடா: இந்த நிறுவனம் இந்தாண்டு 48,343 யூனிட்களை விற்றுள்ளது, கடந்தாண்டு 45,220 யூனிட்களை விற்று 6.9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 44,810 யூனிட்களை விற்று இந்த மாதத்தில் 7.9% வளர்ச்சி வந்துள்ளது.   

6 /7

2. ஹூண்டாய்: கார் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் இந்நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் 48,001 யூனிட்களையும், இந்தாண்டு 55,128 யூனிட்களையும் விற்று மொத்தம் 14.8% வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 54,241 யூனிட்கள் விற்பனையானதில் கடந்த மாதத்தை விட தற்போது 1.6% வளர்ச்சி உள்ளது.   

7 /7

1. மாருதி சுசுகி:  இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான இதில் கடந்தாண்டு அக்டோபரில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 337 கார்கள் விற்பனையானது. இந்தாண்டு அக்டோபரில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 47 கார்கள் விற்று 19.7% வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த செப்டம்பரில் 1 லட்சத்து 50 ஆயிர்தது 812 கார்களை விற்று 11.4 வளர்ச்சியை கண்டுள்ளது.