இறந்த செல்ல நாய்க்கு கோவில் கட்டிய முதியவர்: இணையவாசிகளை இளக வைத்த நிகழ்வு

Viral Video: தமிழகத்தைச் சேர்ந்த 82 வயதான முத்து என்பவர் தனது வளர்ப்பு நாயின் நினைவாக கோவில் கட்டியுள்ளார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2022, 02:44 PM IST
  • செல்ல நாயின் நினைவாக கோவில்.
  • கோவிலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
  • அனைவரும் முதியவரின் பாசத்தை பாராட்டி வருகின்றனர்.
இறந்த செல்ல நாய்க்கு கோவில் கட்டிய முதியவர்: இணையவாசிகளை இளக வைத்த நிகழ்வு title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மனிதர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை காதலிக்கிறார்கள். செல்லப்பிராணிகளை பெரும்பாலும் தங்கள் வீட்டு உறுப்பினர்களகாவே மக்கள் கருதுகிறார்கள். தங்கள் குழந்தைகளைப் போல செல்லப்பிராணிகள் மீது பாசம் காட்டுகிறார்கள். 

அதனால்தான், ஏதாவது ஓரு சந்தர்ப்பத்தில், விபத்துகள் நேர்ந்தோ, அல்லது உடல்நிலை சரியில்லாமலோ இந்த பிராணிகள் இறந்துவிட்டால், அதன் துக்கமும் தாக்கமும் மிகவும் அதிகமாக இருக்கிறது. செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களால் இந்த அதிர்ச்சியை தாங்க முடிவதில்லை. 

இது தொடர்பான செய்தி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் சிவகங்கையில் 82 வயது முதியவர் ஒருவர் தனது பண்ணையில் தனது வளர்ப்பு நாய்க்கு கோவில் கட்டியுள்ளார்.

செல்ல நாயின் நினைவாக கோவில்

நாய்க்கு ஒருவர் கோவில் கட்டுவது சற்று வினோதமாக இருக்கும். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த 82 வயதான முத்து என்பவர் தனது வளர்ப்பு நாயின் நினைவாக கோயில் கட்டியுள்ளார். தமிழ்நாட்டின் சிவகங்கையில் உள்ள தனது பண்ணையில் அவர் இந்த கோயிலை கட்டியுள்ளார். 

கடந்த 11 ஆண்டுகளாக முத்து தனது செல்ல நாய் டாம் உடன் வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் டாம் உயிரிழந்தது. இந்த சோகத்தை முத்துவால் தாங்க முடியவில்லை. அவர் தனது நாயின் நினைவாக ஒரு கோவிலை கட்ட முடிவு செய்து, அதை கட்டியும் முடித்தார். 

இந்த கோவிலின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. செல்லப்பிராணிக்கு முதியவர் கோவில் கட்டியுள்ள செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அனைவரும் முதியவரின் பாசத்தை பாராட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க | 5 KM ஆம்புலன்ஸ் பின்னால் விடாமல் ஓடிய பாசக்கார குதிரை, வைரல் வீடியோ 

முதியவர் தன் நாய்க்காக கட்டிய கோவிலின் வீடியோவை இங்கே காணலாம்: 

11 வருடங்கள் செல்ல நாயுடன் இருந்தார்

ஒருவருடன் நீண்ட காலம் பழகினாலோ, ஒன்றாக இருந்தாலோ, பாசமும் நேசமும் தானாகவே ஏற்படுவது சகஜம். தமிழ்நாட்டின் முத்துவின் விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. இவரும் இவரது வளர்ப்பு நாயும் 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். நாயின் மீது முத்து அளவுகடந்த பாசம் கொண்டிருந்தார். 

நாய் இறந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது வயல்வெளியில் அவர் தனது நாய்க்கு ஒரு ஒரு கோவில் கட்டி அதை நினைவுகூர்ந்து வருகிறார். இக்கோயில் கட்டும் பணிக்கு 80 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவிலை கட்டிய முத்து ஒரு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார்.

மேலும் படிக்க | Viral Video: மரணம் நெருங்குவதை அறியாமல் பாம்பிடம் சிக்கி பலியான எலி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News