பலசாலியை மல்லாக்க சாய்த்த சிலிண்டர்: காமெடி வீடியோ வைரல்

பலசாலி ஒருவர் தன்னை பலசாலி என விளம்பரப்படுத்திக் கொள்ள சிலிண்டரை தூக்கியபோது மல்லாக்க கவிழ்ந்த வீடியோ காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 9, 2023, 09:25 PM IST
  • சிலிண்டரை தூக்கி சாகசம்
  • மல்லாக்க விழுந்த இளைஞர்
  • இணையத்தில் வீடியோ வைரல்
பலசாலியை மல்லாக்க சாய்த்த சிலிண்டர்: காமெடி வீடியோ வைரல் title=

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள். இந்த பழமொழி என்றைக்கும் பொருந்தும். சில காலங்களுக்கு முன்பு நண்பர்களோடு, உறவுகளோடும் உட்கார்ந்து வாயாற பேசி சிரித்த மகிழ்ந்த காலம்போய் இப்போது அந்த இடத்தை ஸ்மார்ட்போன்கள் நிரப்பிவிட்டன. அதில் வரும் வைரல் வீடியோக்கள் நம்மை மெய் மறந்து சிரிக்க வைப்பவையாக இருக்கின்றன. நீங்கள் சோஷியல் மீடியாவை பார்க்க தொடங்கிவிட்டால் உங்களுக்கு நேரம் போவதே தெரியாது. ஒரு சில நொடிகளில் வைத்துவிடலாம் என எண்ணி தான் எல்லோரும் மொபைலை எடுப்போம். ஆனால் அதில் வரும் வீடியோக்கள் நம்மையறியாமலேயே அதில் மூழ்க வைத்து, என்ன நோக்கத்திற்காக செல்போனை எடுத்தோம் என்பதை கூட மறந்துவிடுவோம். அந்தளவுக்கு ரசிக்க வைக்கும் வீடியோக்கள் ஏராளமானவை சோஷியல் மீடியாவில் கொட்டிக் கிடக்கன்றன.

மேலும் படிக்க | தாத்தாவுக்கு கல்யாணம்: இணையத்தின் இளசுகளை கடுப்பேற்றும் முதியவர்.. வைரல் விடியோ

டிவிட்டர், யூடியூப் பேஸ்புக் என எல்லா இடமும் வைரல் வீடியோக்கள் மயம்தான். அதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வரும். ஆனால், ஒரு சில வீடியோக்கள் மட்டுமே பார்வையாளர்களின் கவனத்தைப் பெறும். அப்படியான வீடியோ வகைகளில் ஒன்று பலசாலி என நினைத்துக் கொண்டு சீன் போட முயற்சி செய்து, மல்லாக்க கவிழ்ந்த ஒருவரின் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. யாரும் தன்னை கவனிக்கவில்லை என நினைத்துக் கொண்டார் போலும். அவர் பாட்டுக்கு வந்து திடீரென சிலிண்டரை தூக்கி, ஏதோ உடற்பயிற்சி செய்வது போல் பாவனைகள் எல்லாம் காட்டிக் கொண்டிருக்க, திடீரென அவரால் அந்த வெயிட்டை பேலன்ஸ் செய்ய முடியாமல் கவிழ்ந்து விழுந்து விடுகிறார். 

அந்த நேரத்தில் அவரையே யாராவது ஒருவர் வந்து தூக்கிவிட வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுக் கிடக்கிறார். பரிதாபமான நிலை தான் என்றாலும் சீன் போட்டவருக்கு வந்தது வினை. Fun_Viral_Vids என்ற டிவிட்டர் பக்கத்தில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. அதில் மஞ்சள் வேட்டியுடன் வரும் பலசாலி, அங்கிருக்கும் சிலிண்டரை எடுத்து ஏதோ ஒரு சாகசம் செய்ய முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் அவரால் சிலிண்டரை பேலன்ஸ் செய்ய முடியவில்லை. அப்படியே பின்னால் கவிழ்ந்தும் விடுகிறார். உடனே அங்கிருப்பவர்கள் ஓடிச் சென்று தூக்கிவிடும் நிலை வருகிறது. பார்க்கவே செம காமெடியாக இருக்கும் இந்த வீடியோவை மட்டும் டிவிட்டரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், யாராவது அவர் இப்படி சிக்குவார் என நினைச்சீங்களா?, நான் என்னவோ பெரிய பலசாலி என நினைச்சு ஏமாந்திட்டேன் என்றெல்லாம் காமெடியாக கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: நீ நடந்தால் நடை அழகு... தத்தி தத்தி நடைபயிலும் குட்டியானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News