குடும்பத்துடன் டூர் ட்ரிப்; சூர்யா, ஜோதிகா வீடியோ வைரல்

Surya Jyothika Viral Video: நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் டூர் சென்றுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 24, 2022, 01:02 PM IST
  • சூர்யா - ஜோதிகா வைரல் வீடியோ
  • குடும்பத்துடன் டூர் ட்ரிப் வீடியோ
  • மகள் தியா எடிட் செய்த வீடியோ
குடும்பத்துடன் டூர் ட்ரிப்; சூர்யா, ஜோதிகா வீடியோ வைரல் title=

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் இவர் நடித்திருந்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் மக்களிடம் அசத்தலான வரவேற்பை பெற்றார். தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நேரத்தில் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த சுற்றுலா அவர்  ஜோதிகா, தேவ், தியா ஆகியோருடன் சென்றுள்ளார். 

இந்த நிலையில் மத்திய அமெரிக்கா நாடான கோஸ்டாரிக்காவுக்கு சென்றுள்ள அவர்கள், அங்குள்ள அனைத்து சாகச விளையாட்டுகள் விளையாடுவதுடன், இயற்கை அழகுகளையும் ரசித்து வருகின்றனர். அந்த இடம் பார்ப்பதற்கு கண்ணிற்கு குளிர்ச்சியாக பச்சை பசேலென இருக்கிறது. அங்குள்ள சுற்றுலா தளங்களை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து வரும் சூர்யா, மனைவி மற்றும் மகளுடன் காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் அங்கு பல்வேறு சாகச விளையாட்டுகளையும் அவர்கள் விளையாடி உள்ளார். 

மேலும் படிக்க | விஜய்யிடம் ஆர்.ஜே. பாலாஜி சொன்ன கதை தெரியுமா?

அந்தவகையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒன்றாக தொகுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜோதிகா. இந்த வீடியோவை ரீல்ஸாக ஜோதிகா பதிவிட்டுள்ளார். அதில் ‘புர விடா' என்ற கேப்ஷனை குறிப்பிட்டுள்ளார். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

 

புர விடா என்றால் ஸ்பேனிஷ் மொழியில் புனிதமான வாழ்க்கை என்று அர்த்தம். மேலும் தான் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை தனது மகள் தியா தான் எடிட் செய்ததாக ஜோதிகா குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை எம்பட் செய்து சூர்யா தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அத்துடன் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் இந்த வீடியோவில் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக நேற்று முன்தினம் வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தியா பெற்றுள்ள மதிப்பெண்களின் விவரங்கள் வெளியாகி வைரலானது. அதன்படி அவர் தமிழ் பாடத்தில் 95 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 99 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 95 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்.  இதைவிட சிறப்பு என்னவென்றால் பலரும் கடினமானது என கருதும் கணித பாடத்தில் இவர் 100 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.

தற்போது நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' படத்தில் பணியாற்றி வருகிறார். அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா, சுதா கொங்கரா, வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆர்.ரவிக்குமார் ஆகியோரது படங்களில் நடிக்கவிருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தாலியோடு போஸ் கொடுக்கும் நயன்... ரசிக்கும் விக்கி! என்னா லவ்வு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News