12 ஆண்டு...இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், பண மழை கொட்டும்

Guru Gochar 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் பெயர்ச்சியாகும் போது, ​​அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். ஏப்ரலிலும் பல கிரகங்கள் பெயர்ச்சி செய்யப் போகிறது, அதன்படி குரு பெயர்ச்சி 22 ஆம் தேதியும், சூரிய பெயர்ச்சி 14 ஆம் தேதி நடக்கப் போகின்றது. அதன்படி சூரியன் மற்றும் குரு சேர்க்கை பல ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 7, 2023, 01:06 PM IST
  • குரு பெயர்ச்சி 22 ஆம் தேதி நடக்கயுள்ளது.
  • சூரிய பெயர்ச்சி 14 ஆம் தேதி நடக்கப் போகின்றது.
  • சூரியன் மற்றும் குரு சேர்க்கை பல ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும்.
12 ஆண்டு...இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், பண மழை கொட்டும் title=

சூரியன் - குரு யுதி பலன் 2023: ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்கள் பெயர்ச்சியாகப் போகின்றன. அந்த வகையில் ஏப்ரல் 14-ம் தேதி சூரியன் மீனத்தில் இருந்து விலகி செவ்வாய் ராசியான மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே நேரத்தில், ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு மீனத்திலிருந்து விலகி மேஷ ராசியில் நுழைகிறார். இதனால் மேஷ ராசியில் சூரியனும் குருவும் சேர்க்கை நடக்கப் போகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணியின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனால் அதன் நேரடி பலன் சில ராசிகளில் மட்டுமே தெரியும். அந்த ராசிக்காரர்களை யார் என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

மேஷ ராசி: ஜோதிட சாஸ்திரப்படி சூரியனும் குருவும் சேர்க்கை முதல் வீட்டில் நடக்கும். இந்த அரிய சேர்க்கையால் இந்த ராசிக்காரர்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். ஆற்றல் பெருகும். இதுமட்டுமின்றி மரியாதையும் கூடும். இதுமட்டுமின்றி சம்பள உயர்வுடன் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | சுக்கிர பெயர்ச்சியால் 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்கியது..! செல்வங்கள் சேரும் நேரம்

மிதுன ராசி: மிதுன ராசிக்கு 11வது வீட்டில் சூரியன் மற்றும் குரு சேர்க்கையாகப் போகிறது. இந்த நேரத்தில் பொருளாதார நிலை வலுவாக இருக்கும் மற்றும் சாதகமான முடிவுகளைக் காண்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்ற பாதை திறக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில், பயண வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும்.

கடக ராசி: இந்த ராசிக்கு பத்தாம் வீட்டில் ஒரு கூட்டணி உருவாகப் போகிறது, இது வேலைத் துறையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் வேலைத் துறையில் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். அதுமட்டுமின்றி வியாபாரத்திலும் நல்ல லாபம் ஈட்ட முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக கிடைக்கும்.

சிம்ம ராசி: ஜோதிடத்தின்படி, இந்த ராசியின் ஒன்பதாம் வீட்டில் இந்த கூட்டணி உருவாகப் போகிறது, இது அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்க உதவும். இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் முன்னேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால் பொருளாதார நிலை இன்னும் வலுவாக இருக்கும். நீண்ட பயணத்திற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. தந்தையுடனான உறவில் பலம் உண்டாகும்.

மீன ராசி: இந்த ராசியின் இரண்டாம் வீட்டில் சூரியனும் குருவும் இணைந்திருப்பது உங்களுக்கு சுப பலன்களைத் தரும். உங்கள் பேச்சு மற்றும் உறவுகள் இந்த நேரத்தில் மேம்படும். நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். தொழிலில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றமும், வியாபாரத்தில் லாபமும் உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | புதன் செவ்வாய் கிரகங்களின் பரிவர்த்தனையால் சூரிய கிரகணம் முதல் கஷ்டப்படும் ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News