குருவின் அருளால் அடுத்த 120 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

Guru Vakra Peyarchi: குருவின் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 29 ஜூலை 2022, அதாவது இன்று தேவகுரு வியாழன் தனது ராசியான மீனத்தில் வக்ராமாகியுள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 29, 2022, 11:28 AM IST
  • குரு பகவானின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும்.
  • இந்த நேரத்தில் உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கலாம்.
  • பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும்.
குருவின் அருளால் அடுத்த 120 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம் title=

குரு வக்ர பெயர்ச்சி 2022: 29 ஜூலை 2022, அதாவது இன்று தேவகுரு வியாழன் தனது ராசியான மீனத்தில் வக்ராமாகியுள்ளார். குரு பகவான் நவம்பர் 2022 வரை இந்த நிலையில் இருப்பார். இதற்குப் பிறகு குருவின் நிலை இயல்பான இயக்கத்தில், அதாவது நேரடி இயக்கத்தில் மாறும். குரு பகவானின் இந்த நிலை மாற்றம் அனைத்து ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் இதன் தாக்கம் அதிகப்படியாக காணப்படும். குருவின் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம்:

தேவகுரு வியாழன் ரிஷப ராசியிலிருந்து 11வது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. அலுவலக பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும், வியாபாரிகளுக்கு லாபமும் கிடைக்கும். உங்கள் பணி பாணியில் ஆக்கப்பூர்வமான மாற்றம் காணக்கிடைக்கும். 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி பலன் 2022: அக்டோபருக்குள் இந்த 4 ராசிகளுக்கு செல்வம் பெருகும் 

மிதுனம்:

குரு பகவானின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும். வியாழன் உங்கள் ராசியிலிருந்து 10வது வீட்டில் வக்ரமாகிறார். இந்த காலகட்டத்தில் தொழில் முன்னேற்றம் அடையலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டாகும். இந்த இடமாற்றம் அனுகூலமான விளைவுகளை அளிக்கும். வியாபாரிகளுக்கு இந்த காலத்தில் அதிக லாபம் கிடைக்கும். 

கடகம்:

தேவகுரு வியாழனின் இயக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். வியாழன் உங்கள் ராசியிலிருந்து 9 ஆவது வீட்டில் பிற்போக்கு நிலையில் இருக்கிறார். இந்த நேரத்தில் உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும்.

கும்பம்:

வியாழன் கிரகம் கும்ப ராசியிலிருந்து இரண்டாம் வீட்டில் வக்ரமாகியுள்ளார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் செலவுகளால் சிரமப்படுவீர்கள். இந்த காலத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பது லாபகரமானதாக அமையும்.

மீனம்:

வியாழன் கிரகத்தின் பிற்போக்கு இயக்கம் மீன ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வியாழன் உங்கள் ராசியிலிருந்து முதல் வீட்டில் வக்ரமாகியுள்ளார். இந்த நேரத்தில் உங்கள் வேலையில் மாற்றம் சாத்தியமாகும். இந்த மாற்றத்தால் உங்களுக்கு மேம்பட்ட முன்னேற்றங்கள் ஏற்படும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களின் தலைவிதி இன்று முதல் மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News