குருவின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி பொங்கும்

Jupiter Retrograde: குருவின் ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். பிற்போக்கு நிலையில் உள்ள குரு இந்த ராசிகளின் மீது தனது ஆசிகளைப் பொழிவார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 28, 2022, 06:41 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு பிற்போக்கு நகர்வில் பயணிக்கும் வியாழன் பல நன்மைகளைத் தருவார்.
  • சிறிய முயற்சிகளில் பெரிய பலன்கள் கிடைக்கும்.
  • தொழிலில் எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும்.
குருவின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி பொங்கும் title=

ஜூலை மாதம் குரு வக்ரி 2022: செல்வத்தையும் செழிப்பையும் தரும் கிரகமான வியாழன் இப்போது வக்ரமாகவுள்ளார், அதாவது பின்னோக்கி நகரவுள்ளார். அவர் ஜூலை 29 முதல் தனது சொந்த ராசியான மீனத்தில் வக்கிரமாவார். 

வியாழன் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி மீன ராசியில் நுழைந்தார். வியாழனின் பிற்போக்கு நிலையின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் சிலருக்கு தீமையும் ஏற்படும். குறிப்பாக குருவின் ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். ஏனெனில், பிற்போக்கு நிலையில் உள்ள குரு இந்த ராசிகளின் மீது தனது ஆசிகளைப் பொழிவார். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

வியாழனின் பிற்போக்கு நகர்வு இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும்

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு  பிற்போக்கு நகர்வில் பயணிக்கும் வியாழன் பல நன்மைகளைத் தருவார். நிதி வளம் பெருகும். அதிக சம்பளத்துடன் கூடிய புதிய வேலை கிடைக்கலாம். அல்லது, ஏற்கனவே உள்ள பணியில் சம்பள உயர்வு கிடைக்கலாம். 

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு பிற்போக்கு நிலையில் உள்ள குரு பகவானால் சாதகமான பலன்கள் ஏற்படும். சிறிய முயற்சிகள் பெரிய பலன்களை அளிக்கும். தொழிலில் எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். இந்த உதவிகளால் பல பயன்கள் கிடைக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி ஒன்று இப்போது உங்களை தேடி வரும். மகிழ்ச்சியான சூழல் நிலவும். 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு வியாழனின் வக்ர நகர்வு அற்புதமான நேரத்தைக் கொண்டுவரும். இந்த நேரம் அவர்களுக்கு பதவி, பணம், கௌரவம் அனைத்தும் கை கூடும். தடைபட்டிருந்த பணம் இப்போது கிடைக்கும். தடைபட்ட வேலைகளும் நடந்து முடியும். இது முதலீடு செய்வதற்கு உகந்த காலமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளின் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபம் ஈட்டலாம். 

கும்பம்: 

மீனத்தில் வியாழனின் பிற்போக்கு நகர்வு கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். வேலை செய்பவர்களும் நன்மை அடைவார்கள். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். செயல்பாடு அதிகரிக்கும், அது உங்களுக்குப் புகழைக் கொடுக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.  கணவன் / மனைவி, குழந்தையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மனதில் உறுதி அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |  ஜூலை 17 வரை இந்த 3 ராசியினருக்கு பண வரவு உண்டாகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News