குருவின் அருளால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம்

Guru Peyarchi 2023: ஹோலிக்குப் பிறகு எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த அதிர்ஷ்ட யோகத்தால் அபரிமிதமான நற்பலன்களை பெறவுள்ளார்கள் என இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 6, 2023, 12:48 PM IST
  • மேஷ ராசிக்காரர்கள் கஜலட்சுமி யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
  • வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
  • பணியிடத்தில் பாராட்டுக்கள் கூடும்.
குருவின் அருளால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் title=

குரு பெயர்ச்சி 2023, கிரகங்களில் அதன் தாக்கம்: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளையும், நிலைகளையும், இயக்கங்களையும் மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றங்களால் ராசிகளில் சுப மற்றும் அசுப பலன்கள் ஏற்படும். ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது சிலருக்கு நல்ல நாட்கள் தொடங்கும். சிலருக்கு நேரம் பிரச்சனைகள் நிறைந்ததாக மாறும். 

ஹோலி பண்டிகை மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்குப் பிறகு ஒரு பெரிய யோகம் உருவாக உள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, தெய்வங்களின் குருவான வியாழன் ஏப்ரல் 22 ஆம் தேதி மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். பல ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும் சந்திரனும் வியாழனும் இணைந்து கஜலக்ஷ்மி யோகம் உருவாகும்.

ஏப்ரல் 22ஆம் தேதி அதிகாலை 3.33 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். சந்திரன் ஏற்கனவே மேஷ ராசியில் இருக்கிறார். குருவின் வருகையால் இவ்விரு கிரகங்களும் இணைந்து கஜலட்சுமி யோகத்தை உருவாக்கும். இந்த யோகம் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தை அதிகரிக்கிறது. இந்த யோகம் உருவாகும் ராசிகளில் ஏழரை சனியின் தாக்கம் நீங்கும். ஹோலிக்குப் பிறகு எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த அதிர்ஷ்ட யோகத்தால் அபரிமிதமான நற்பலன்களை பெறவுள்ளார்கள் என இந்த பதிவில் காணலாம். 

 மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் கஜலட்சுமி யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுக்கள் கூடும். உங்கள் காதல் விவகாரங்களுக்கு இந்த காலம் சாதகமானது. திருமணம் ஆகாதவர்களுக்கு புதிய உறவுகள் வரலாம். வருமானம் பெருகும், பழைய வேலைகளும் முடிவடையும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று இவர்கள் மகிழ்ச்சி மழையில் நனைவார்கள், நினைத்தது நடக்கும்!! 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி யோகம் வியாபாரத்தில் லாபம் தரும். வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படலாம். மாணவர்கள் இடையூறுகள் இருந்தாலும் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். சமமான மரியாதை கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தனிமையில் இருப்பவர்கள், அவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறப்பு நபரை சந்திக்கலாம். 

தனுசு

கஜலக்ஷ்மி யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் பண பலன்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். குரு பகவான் தனுசு ராசியின் ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சியாகிறார். இதனால் வியாபாரிகள் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். படிப்புக்காக வெளியூர் செல்லும் எண்ணம் இருந்தால், இது அதற்கான சிறப்பான காலமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை  உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இதை செய்தால் செல்வங்களை கொடுக்கும் மகாலட்சுமி ஓடோடி வருவாள்..! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News