12 ஆண்டு..ஏப்ரல் மாதம் முக்கிய கிரகப் பெயர்ச்சி, 12 ராசிகளின் கதி என்ன?

ஏப்ரல் 22ம் தேதி சனிக்கிழமை காலை 06.12 மணிக்கு குரு மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. எனவே 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சியின் தாக்கம் பற்றி தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 24, 2023, 03:41 PM IST
  • 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்.
  • ஏப்ரல் 22ம் தேதி சனிக்கிழமை காலை 06.12 மணிக்கு பெயர்ச்சி.
  • 12 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு நிகழ்வு.
12 ஆண்டு..ஏப்ரல் மாதம் முக்கிய கிரகப் பெயர்ச்சி, 12 ராசிகளின் கதி என்ன? title=

அறிவு மற்றும் சுப காரியங்களின் காரணியான குருவின் பெயர்ச்சி ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. ஏப்ரல் 22ம் தேதி சனிக்கிழமை காலை 06.12 மணிக்கு குரு மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. மேலும் மே 1, 2024 ஆம் தேதி வரை மேஷ ராசியில் குரு இருப்பார். பின்னர் மே 01, 2024 அன்று மதியம் 01:50 மணிக்கு ரிஷப ராசியில் குரு இடப்பெயர்ச்சி அடைவார். இதனிடையே தற்போது குரு அஸ்தமித்து, ஏப்ரல் 30ல் உதயமாகிறார்.

இந்த நிலையில் ஏப்ரல் 22-ம் தேதி குரு ராசி மாற்றம் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும். சில ராசிக்காரர்களின் வாழ்வில் சாதகமான பலன் காணப்படும், அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு பக்கவிளைவுகள் தென்படும். எனவே 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சியின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் சூரிய மஹாதிசை! பலன்களும் பரிகாரங்களும்!

மேஷம்: நீங்கள் அவசரத்தைத் தவிர்க்க வேண்டும். முன்பை விட அதிகமாக சேமிக்க முயற்சிப்பீர்கள். செயல்களிலும் முடிவுகளிலும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்: உங்கள் ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் கட்டுப்பாட்டை வைத்திருங்கள்.

மிதுனம்: உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். வருமான உயர்வால் பொருளாதார பக்கம் வலுப்பெறும். கல்விப் போட்டியில் வெற்றி பெறலாம்.

கடகம்: தொழில், வியாபாரம் செய்பவர்கள் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். புதிய சலுகைகளைக் காணலாம். பயணங்களால் லாபகரமான சூழ்நிலை உருவாகும். பணிச்சுமை அதிகரிக்கலாம்.

சிம்மம்: திடீரென்று பணப் பலன்களைப் பெறலாம். சிக்கிய பழைய பணத்தை திரும்ப பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி: உங்கள் ராசிக்காரர்களுக்கு முதலீடு நன்மை தரும். கூட்டாண்மையில் பணிபுரிபவர்கள் தங்கள் தொழிலை பெருக்கிக்கொள்ளலாம். காதல் வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும்.

துலாம்: உங்கள் ராசிக்காரர்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் வெற்றி உண்டாகும். முதலீடு செய்வதற்கு நல்ல நேரம்.

விருச்சிகம்: தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் நிதானத்துடன் செயல்படவும். குடும்பத்தில் வாக்குவாத சூழ்நிலை ஏற்படும். 

தனுசு: குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில், உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்: குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களுடன் உல்லாசமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவார்கள். 

கும்பம்: இந்த நேரத்தில் அதிகபட்ச சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு உணர்வு அதிகரிக்கும்.

மீனம்: நீண்ட நாள் நோயிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். இதனால் மன அமைதி கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் சித்திரையில் ராஜ யோகத்தை அனுபவிக்க உள்ள ‘6’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News