அக்டோபரில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான நேரம், லாபமோ லாபம்

Rahu Transit: ராகுவின் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ராகு பெயர்ச்சி ஆனவுடன் இந்த ராசிகளின் பிரச்சனைகள் குறையும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 21, 2023, 03:42 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும்.
  • இந்த காலகட்டத்தில், உங்கள் நிதி நிலைமை சீராக இருக்கும்.
  • முதலீடுகளில் லாபமும், செல்வச் சேர்க்கையும் அதிகரிக்கும்.
அக்டோபரில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான நேரம், லாபமோ லாபம் title=

ராகு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், ராகு மற்றும் கேது இரண்டும் நிழல் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக இந்த கிரகங்களின் பெயர்களை கேட்டாலே மக்கள் அச்சப்படுவது உண்டு. ராகுவும் கேதுவும் 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசி மாறுகிறார்கள். தற்போது, ​​ராகு மேஷ ராசியில் உள்ளார். ராகு 30 அக்டோபர் 2023 அன்று மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். 

ராகு கிரகம் அக்டோபர் 30, 2023 அன்று மாலை 04:37 மணிக்கு மேஷ ராசியில் இருந்து மீனத்திற்கு இடம் பெயர்கிறார். மேலும் ராகு இந்த ராசியில் மே 18, 2025 வரை இருப்பார். மே 18, 2025 அன்று இரவு 07:35 மணிக்கு ராகு மீனத்தில் இருந்து விலகி கும்ப ராசிக்கு பிரவேசிப்பார். ராகுவுடன் கேது தற்போது துலாம் ராசியில் இருக்கிறார். கேது 30 அக்டோபர் 2023 அன்று கன்னி ராசியில் பெயர்ச்சி ஆவார். ராகுவும் கேதுவும் எப்போதும் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். ராகுவின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகுவின் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ராகு பெயர்ச்சி ஆனவுடன் இந்த ராசிகளின் பிரச்சனைகள் குறையும். இவர்களுக்கு அனைத்து பணிகளிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி சாதகமாக அமையும்:

மேஷ ராசி: 

தற்போது ராகு மேஷ ராசியில் இருக்கிறார். குரு பகவானும் இப்போது மேஷத்தில் உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் மேஷ ராசியில் குரு சண்டாள தோஷம் உருவாகியுள்ளது. ஆனால் மீன ராசியில் ராகு நுழைந்தவுடன் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். அதன் பிறகு மேஷ ராசிக்காரர்களுக்கு குரு தனது ஆசிகளைப் பொழியத் தொடங்குவார். ஆகையால் ராகு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக சாதகமான பலன்களை அள்ளிக்கொடுக்கும்.

மேலும் படிக | 30 ஆண்டுக்குப் பிறகு சனியால் அதிசய யோகம்.. இந்த ராசிகளின் காட்டில் பணமழை

ரிஷப ராசி:

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் நிதி நிலைமை சீராக இருக்கும். முதலீடுகளில் லாபமும், செல்வச் சேர்க்கையும் அதிகரிக்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மேலும் இதில் வெற்றியும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளும் இந்த நேரத்தில் வெற்றிகரமாக முடிவடையும். ராகுவின் சுப தாக்கத்தால் உங்கள் முன் உள்ள சவால்கள் குறையும்.

கன்னி ராசி:

மீன ராசியில் ராகு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில், எதிர்பாராத நிதி ஆதாயம் மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் சில நல்ல செய்திகளையும் இந்த நேரத்தில் பெறக்கூடும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்கள், கூட்டாண்மையில் வேலை செய்துகொண்டிருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும். 

மகர ராசி: 

மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ராகுவின் பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். இந்த காலத்தில் வருமான வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் இருக்கும். மேலும் இந்த காலத்தில் நிதி ரீதியாக பலமடைய வாய்ப்புகள் உள்ளன. மொத்தத்தில் ராகுவின் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களின் பிரச்சனைகளை குறைக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | அபூர்வ 'தன ராஜயோகம்' - இனி இந்த 3 ராசிக்காரர்களின் வீடுகளில் ஒரு மாதத்திற்கு பணமழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News