குரு பெயர்ச்சியால் உருவான எதிர் ராஜயோகம்... இந்த 4 ராசிகளுக்கு பம்பர் பலன்கள்!

Guru Peyarchi 2023: மேஷ ராசியில் குருவின் சஞ்சாரத்தால் உருவாகும் எதிர் ராஜயோகம் இம்முறை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்களைத் தரும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 5, 2023, 02:29 PM IST
  • 12 ஆண்டுகளுக்கு, பிறகு மேஷ ராசியில் குரு நுழைந்துள்ளார்.
  • எதிர் ராஜயோகம் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
  • இந்த ராஜயோகம் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரப்போகிறது.
குரு பெயர்ச்சியால் உருவான எதிர் ராஜயோகம்... இந்த 4 ராசிகளுக்கு பம்பர் பலன்கள்! title=

Guru Peyarchi 2023: வேத ஜோதிடத்தில், வியாழன் கிரகத்திற்கு தேவகுரு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறார். கடந்த ஏப். 22ஆம் தேதி, குரு பகவான் மேஷ ராசிக்குள் நுழைந்தார். 

12 ஆண்டுகளுக்கு, பிறகு மேஷ ராசியில் குரு நுழைந்துள்ளார். மேஷ ராசியில் குரு சஞ்சாரம் செய்வதால் எதிர் ராஜயோகம் உருவாகிறது. எதிர் ராஜயோகம் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த ராஜயோகம் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரப்போகிறது. குருவின் சஞ்சாரத்தால் உருவாகும் எதிர் ராஜயோகம் இம்முறை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்களைத் தரும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

எதிர் ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்களைத் தரும்

மிதுனம்

குரு சஞ்சாரத்தால், எதிர் ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இவர்களுக்கு திடீரென பணம் கிடைக்கும். பணம் பெற புதிய வழிகள் அமையும். தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். முதலீடு செய்வதற்கும் நல்ல நேரம். 

மேலும் படிக்க | இந்த ராசிகளின் கஷ்டகாலம் தீர்ந்துவிட்டது: புதன் உதயம் மகிழ்ச்சி மழையில் நனையவைக்கும்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கும் குருவின் ராசி மாற்றத்தால் உருவாகும் எதிர் ராஜயோகம் பல பலன்களைத் தரும். செயல்களில் வெற்றி ஏற்படும், வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு தங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய முன்னேற்றம் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். 

கன்னி

இந்த எதிர் ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். கடன் சுமை குறையும். தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பதவி கௌரவம் கூடும். திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர் ராஜயோகம் மிகவும் சுப பலன்களைத் தரும். வியாபாரம் செய்பவர்கள் வித்தியாசமாக இருக்கலாம். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணத்தைப் பெறலாம். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.

முன்னதாக, குரு பகவான் தனது ராசியை மாற்றுவதற்கு முன் அஸ்தமனமானார். குரு பெயர்ச்சியான பிறகு ஏப்ரல் 27 ஆம் தேதி அவர் உதயமானார். இதனால் குரு அஸ்தமனமானதால் சுப காரியங்களுக்கு இருந்த தடை நீங்கிவிட்டத்து. இப்போது திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான நல்ல வேளை துவங்கிவிட்டது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | மேஷத்தில் குரு உதயம்: 5 ராசிக்காரர்களுக்கு பணக்கார ராஜயோகம், உங்க ராசி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News