பலே பலே!! டிசம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பொற்காலம், ராஜயோகம்

Horoscope December 2023: கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை டிசம்பர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதம் புதன், சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் பல ராஜயோகங்களை உருவாக்குகின்றன. இந்த ராஜயோகம் மக்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 1, 2023, 11:43 AM IST
  • டிசம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
  • காதல் துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.
பலே பலே!! டிசம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பொற்காலம், ராஜயோகம் title=

மாதாந்திர ராசிபலன் டிசம்பர் 2023: டிசம்பர் மாதம் இன்று துவங்கியுள்ளது, 2023 ஆம் ஆண்டின் கடைசி மாதத்திலிருந்து, கடந்து செல்லும் ஆண்டு நிறைய கொடுக்கும் என்று மக்கள் நிறைய எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர். புத்தாதித்ய ராஜயோகம், ஆதித்ய மங்கள யோகம் போன்ற சுப யோகங்களை உருவாக்கும் டிசம்பர் மாதத்தில் (December Month Horoscope 2023) பல முக்கியமான கிரகங்களின் மாற்றங்களும் நடைபெறுகின்றன. இந்த ராஜயோகத்தால் ஐந்து ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சிறப்பாக அமையப் போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய பணம், முன்னேற்றம், மரியாதை, அன்பு கிடைக்கும். இந்நிலையில் இந்த டிசம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு  அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம் மாத ராசிபலன் (Aries Zodiac Sign): டிசம்பர் 2023 மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய பலன்களைத் தரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்தின் அடிப்படையில் வேலை முடிவடையும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சில மத ஸ்தலங்களுக்குச் செல்லலாம். நீண்ட நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இந்த மாதம் அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

சிம்மம் மாத ராசிபலன் (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் இனிய ஆரம்பத்தைத் தரும். மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகள் முடிவடையும் போது நீங்கள் மிகுந்த நிம்மதியை உணர்வீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இது மிகவும் சாதகமான நேரம். வெளியூர் சம்பந்தமான தொழில் செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். உங்கள் காதல் துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.

மேலும் படிக்க | டிசம்பர் மாதம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படியிருக்கும்? இதோ காதல் ராசிப்பலன்!

கன்னி மாத ராசிபலன் (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் ஒரு வரப்பிரசாதம் கிடைத்தது போன்று இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். மரியாதை கிடைக்கும். உங்கள் முடிவுகளை மக்கள் பாராட்டுவார்கள். சில விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த முயர்ச்சிக்கவும்.

துலாம் மாத ராசிபலன் (Libra Zodiac Sign): துலாம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் பதவி, கௌரவம், பணப் பலன்கள் அதிகமாக கிடைக்கும். ஒன்றன் பின் ஒன்றாக பல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் பலத்தால் வெற்றியை அடைவீர்கள். மாணவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். செல்வாக்கு மிக்க நபரை சந்திப்பது எதிர்காலத்தில் பெரிய பலன்களைத் தரும்.

மீனம் மாத ராசிபலன் (Pisces Zodiac Sign): மீன ராசிக்காரர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம். உங்கள் கனவு நனவாகும். வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 2024 புத்தாண்டு ராசிபலன்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம், கோடீஸ்வர யோகம்... முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News