மேஷத்தில் வக்ரமடையும் குரு... வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்கும் ‘4’ ராசிகள்!

Jupiter's Retrograde 2023: குரு பகவான் மேஷ ராசியில் 04 செப்டம்பர் 2023 அன்று வக்ர நிலையை அடைகிறார். குரு பகவான் தனது நிலைக்கு ஏற்ப சில ராசிகளுக்கு எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 29, 2023, 05:26 PM IST
  • செலவுகள் அதிகரித்து, கடன் வாங்கும் நிலை கூட ஏற்படலாம்.
  • குடும்ப வாழ்வில் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள்.
  • காதல் உறவிலும் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
மேஷத்தில் வக்ரமடையும் குரு... வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்கும் ‘4’ ராசிகள்! title=

குரு பகவான், அதாவது வியாழன் கிரகம்  மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் புகழ் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் கிடைக்கும் வெற்றிக்குப் பின்னால் குரு பகவானின் சுப நிலை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தில், தேவ குரு பிருஹஸ்பதி ஆன்மீகம், அறிவு, மகிழ்ச்சி - நல்ல அதிர்ஷ்டம் மற்றும் முக்தி போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார். குரு பகவான் மற்ற கிரகங்களைப் போலவே, அவ்வப்போது ராசியை மாற்றுகிறார், வக்ர நிலை அடைகிறார், வக்ர நிவர்த்தி அடைகிறார், அஸ்மதமனம் ஆகிறார் அல்லது உதயமாகிறார்.

குரு பகவான் வக்ர நிலை

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் அமர்ந்து இருக்கும் நிலையில், 04 செப்டம்பர் 2023 அன்று மாலை 04.58 மணிக்கு மேஷ ராசியில் வக்ர நிலை அடைகிறார்.  குரு பகவானின் வக்ர நிலை காரணமாக சில ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அதிகரிக்கப் போகிறது. இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷ ராசி

குரு பகவானின் வக்ர நிலை  மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. குருவின் வக்ர நிலை  உங்களுக்குள் குழப்ப நிலையை உருவாக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் முடிவுகளை எடுப்பதில் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காததால் மனம் வருத்தம் ஏற்படும். முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்காது.  தந்தையுடனான உறவு மோசமடையலாம். குரு பகவானின் வக்ர நிலை காலத்தில் தந்தையும் நோய் வாய்ப்படலாம். இதனால் உங்கள் செலவுகள் அதிகரித்து, கடன் வாங்கும் நிலை கூட ஏற்படலாம். இதன் காரணமாக நீங்கள் மிகவும் பிரச்சனைகளில் சிக்குவீர்கள்.

ரிஷப ராசி

குரு பகவானின் வக்ர நிலை ரிஷப ராசிகளுக்கு சாதகமாக இருக்காது. குறிப்பாக இந்த ராசி பெண்கள் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பு பாதிக்கப்படலாம். எனவே நீங்கள் உண்ணும் உணவு குறித்து கவனமாக இருக்கவும். இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் எந்த தவறான பொருளாதார முடிவையும் எடுக்கலாம். முதலீடுகள் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குரு பகவானின் வக்ர நிலை காலத்தில் தங்கள் பணியிடத்தில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். பலருடன் உங்கள் உறவு மோசமடையலாம். உங்களின் நண்பர்கள் சிலர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். குடும்ப வாழ்வில் செய்யும் தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்வீர்கள்.

மேலும் படிக்க | ஹஸ்த நட்சத்திரத்தில் செவ்வாய்... ‘இந்த’ ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே...!

கடக ராசி

குரு பகவானின் வக்ர நிலை கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் பல அழுத்தங்களை சந்திக்க நேரிடும். பணியில் அலட்சியம் ஏற்பட்டு அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இந்த நேரத்தில் வேலையை மாற்ற திட்டமிட்டிருந்தால், புதிய இடத்திலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் இப்போதே அந்த முயற்சியை கை விடுங்கள். உங்கள் தந்தையுடனான உறவில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். உங்கள் ஆரோக்கியமும் மோசமடையலாம். எனவே கவனமாக இருக்கவும்.

சிம்ம ராசி

குரு பகவானின் வக்ர நிலை சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் மீது பொறுப்புகளின் சுமை மிக அதிகமாக இருக்கலாம். பணியிடத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காது. நீங்கள் சில உடல் நல பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். குறுகிய அல்லது நீண்ட தூர பயணங்களில் நீங்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் காதல் உறவிலும் சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் உறவும் முறியும் தருவாயில் இருக்கலாம். உங்கள் உடல்நிலையில் கவனம் தேவை. இந்த நேரத்தில் நீங்கள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளையும் விவாதங்களையும் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | சனியின் தீய பார்வை விலக... குபேர அருள் கிடைக்க.. வன்னி மரச்செடியை நடவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News