129 நாட்கள் குரு வக்ர பெயர்ச்சி, 4 ராசிகளுக்கு கஷ்ட காலம்

Guru Vakri 2022: 129 நாட்கள் குரு கிரகம் வக்ர நிலையில் இருக்க உள்ளதால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 1, 2022, 03:18 PM IST
  • மேஷ ராசிக்கார்ரகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படும்.
  • எந்த ராசிக்கு பிரச்சனைகள் வரும்.
  • ஜூலை 29 ஆம் தேதி குரு வக்ர பெயர்ச்சி ஆனது.
129 நாட்கள் குரு வக்ர பெயர்ச்சி, 4 ராசிகளுக்கு கஷ்ட காலம் title=

ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போதெல்லாம், அது மனித வாழ்க்கையிலும் பூமியிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்தப் பெயர்ச்சி சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அதன்படி குரு வக்ர நிலையில் இருப்பது ஜோதிடத்தில் பெரிய நிகழ்வாக கருதப்படுகின்றது. அதேபோல் மனிதர்களின் வாழ்க்கையில் கல்வி, திருமணம், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக குரு பகவான் கருதப்படுகிறார். அந்தவகையில் கடந்த ஜூலை 29 அன்று குரு பகவான் வக்ரமானார். இதன் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நேரத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் உள்ளனர். அவைகள் எந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். மேலும் அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்: உங்களுக்கு, குரு கிரகத்தின் வக்ர பெயர்ச்சி சற்று வேதனையாக இருக்கும். வியாழன் உங்கள் 12வது வீட்டில் சஞ்சரிக்கிறார். பொதுவாக இந்த இடம் இழப்பு மற்றும் செலவுகளின் இடமாக அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம், ஆனால் இந்த செலவுகள் உங்கள் யாத்திரையில் இருக்கும். மேலும், வியாழன் கிரகம் உங்கள் விதியின் அதிபதி. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற மாட்டீர்கள். தேவையற்ற செலவுகள் கூடும். 

மேலும் படிக்க | ஆகஸ்ட் மாத ராசிபலன்: உங்க ராசிக்கு எப்படி இருக்கு? யாருக்கு ஆதாயம்? யாருக்கு ஆபத்து?

பரிகாரம்: இந்த நேரத்தில் குருவின் பீஜை மந்திரத்தை ஜபித்து மஞ்சள் வஸ்திரத்தை தானமாக கொடுக்கலாம். சிவா பெருமானுக்கு அரைத்த மஞ்சளை வைத்து அபிஷேகம் செய்யலாம். வியாழன் அன்று மஞ்சள் பொருட்களை தானம் செய்யலாம்.

சிம்மம்: வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சசி உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். ஏனெனில் வியாழன் கிரகம் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் 8 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும். இது நோய் மற்றும் மரணத்தின் இடம் என்று கூறப்படுகிறது. மஞ்சள் காமாலை, கல்லீரல், சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் சிறுது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

பரிகாரம்: இந்த நேரத்தில் புஷ்பராகம் மோதிரம், தங்கம் அல்லது மஞ்சள் போன்றவற்றை அணிந்துக்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் சனி கிரகத்தின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இதனுடன் சனி கிரகத்தை தொடர்புடைய பொருட்களையும் தானம் செய்யலாம்.

துலாம்: வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் உங்கள் பெயர்ச்சி உங்கள் ஜாதகத்தில் இருந்து ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும். இந்த வீடு நோயின் இடம் என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்கு நீரிழிவு நோய் அல்லது வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படலாம். இதனுடன் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம். 

பரிகாரம்: சனிபகவானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும்.

மகரம்: வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு இன்னல்களாக இருக்கும். வியாழன் கிரகம் உங்கள் ராசியிலிருந்து மூன்றாவது வீட்டில் பின்னடைவாக இருப்பதால் இந்த ராசி மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொண்டையில் பிரச்சனை ஏற்படலாம். தைராய்டு பிரச்சனை வரலாம். அதேபோல் இந்த நேரத்தில் உங்களின் வீரம் மற்றும் தைரியம் குறையலாம். 

பரிகாரம்: இந்த நேரத்தில் நீங்கள் வியாழன் கிரகத்தின் பீஜை மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். மேலும், வியாழன் கிரகம் தொடர்பான விஷயங்களையும் தானம் செய்ய வேண்டும்.

 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | குருவின் அருளால் அடுத்த 120 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News