புத்தாண்டு முதல் குரு-சனி உச்சம், இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

Shani Gochar Guru Rasipalan: சனி, வியாழன் ஆகிய கிரகங்களின் சுப ஸ்தானத்தால் வாழ்க்கையில் நன்மைகள் மட்டுமே கிடைக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 31, 2023, 04:09 PM IST
  • மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் அதிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
  • சிக்கிய பணத்தை மீட்க முடியும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
  • பொருளாதார நிலை வலுவாகவும் நிலையானதாகவும் இருக்கும்.
புத்தாண்டு முதல் குரு-சனி உச்சம், இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் title=

ஆண்டின் இறுதியில், வியாழன் தனது நிலையை மாற்றியுள்ளார். இன்று அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி தேவகுரு வியாழன் தன் போக்கை மாற்றி பயணிக்க ஆரம்பித்துள்ளார். அதே நேரத்தில், சனி தேவன் தனது சொந்த ராசியான கும்பத்தில் அமர்ந்திருப்பார். இரண்டு கிரகங்களின் நிலையும் சுபமாக இருக்கும்போது அது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆனந்தமாக மாறும். இதில் தற்போது மேஷ ராசியில் குரு வக்ர நிவர்த்தியாக பயணிக்க போகிறது. எனவே, நாளை முதல் அதாவது 2024 ஆம் ஆண்டு முதல் சனி மற்றும் வியாழனின் நிலை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலனைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம் (Aries Zodiac Sign): வியாழன் மேஷ ராசியில் அமர்ந்து அதிர்ஷ்ட வீட்டைப் பார்ப்பார். வியாழனின் சுப ஸ்தானத்தால் எல்லா வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவது சாதகமாக இருக்கும். சனி உங்கள் 11வது வீட்டை பார்வையிட்டு அங்கிருந்து ஆசிகளைப் பொழிவார். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் அதிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவுடன், உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

மேலும் படிக்க | புத்தாண்டின் முதல் ஏகாதசி எப்போது? 2024ல் வரும் ஏகாதசியின் முழு விவரம்!

மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு சனி, வியாழன் ஆகிய இரு கிரங்களின் நிலையும் சுபப் பலனைத் தரப்போகிறது. வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். சிக்கிய பணத்தை மீட்க முடியும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். சனியும், குருவும் இணைந்து இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரும் வெற்றியைத் தரும். தன்னம்பிக்கையும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.

மகரம் (Capricorn Zodiac Sign): மகர ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் வியாழனின் சஞ்சாரம் சாதகமாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்பும் உருவாகும். ஒவ்வொரு வேலையையும் முழு உழைப்புடன் முடிப்பீர்கள். உங்கள் தொழில் வாழ்க்கையில் சில சிரமங்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம், அது நீண்ட காலம் நீடிக்காது. பொருளாதார நிலை வலுவாகவும் நிலையானதாகவும் இருக்கும். 

கும்பம் (Aquarius Zodiac Sign): 2024 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அருள் பொழிவார். சில முக்கியமான வேலைகளில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். தொழிலுக்கு நல்ல நேரம். வேலையில் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். அபரிமிதமான செல்வத்தைக் கொண்டு வரும். இவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்

மேலும் படிக்க | 500 ஆண்டுக்கு பின் குரு ஆட்டம் தொடங்கியாச்சு.. இந்த ராசிகளுக்கு பொற்காலம்

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News