GURU GOCHAR 2023 வியாழன் பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தால் பாதிக்கப்படும் ’3’ ராசிக்காரர்கள்

Jupiter Guru of Gods: சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறி நட்பு ராசியான மேஷ ராசியில் நுழையும் குருவின் எரிப்பு நிலையால், சங்கடங்களில் உழலப் போகும் ராசிகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 18, 2023, 03:49 PM IST
  • சொந்த ராசியில் இருந்து நட்பு ராசிக்கு மாறும் குருவின் அசுப பலன்கள்
  • தெய்வங்களின் குரு தேவகுரு பிரகஸ்பதியின் கோபப்பார்வை
  • திருமணத் தடைகளை ஏற்படுத்தும் குருப் பெயர்ச்சி
GURU GOCHAR 2023 வியாழன் பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தால் பாதிக்கப்படும் ’3’ ராசிக்காரர்கள்  title=

குரு பெயர்ச்சி 2023: தேவர்களின் குரு என்று அழைக்கப்படும் வியாழன், அனைத்து கிரகங்களுக்கும் குருவாக கருதப்படுகிறார். மாங்கல்ய பாக்கியத்தைக் கொடுப்பவர் என்பதால், திருமணம் நடக்க குருபலன் வரவேண்டும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். குருவின் பார்வை பட்டாலே கோடி நன்மை என்று சொல்லப்படும் நிலையில், குருப் பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வியாழன் கிரகம் 22 ஏப்ரல் 2023 அன்று அதிகாலை 3:33 மணிக்கு அதன் சொந்த ராசியான மீன ராசியிலிருந்து வெளியேறுகிறார்.

சொந்த ராசியான மீனத்தில் இருந்து நட்பு ராசியான மேஷத்திற்கு மாறும் வியாழன், மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது, எரிப்பு நிலையில் இருக்கும், மார்ச் 28க்கு, வியாழன், தனது எரிப்பு நிலையில் இருந்த நிலையிலேயே மீன ராசிக்குள் நுழைவார். பின்னர் ஏப்ரல் 27 காலை 02:07 மணிக்கு அன்று அதன் எரிப்பு நிலையில் இருந்து வெளியாவார்.

மேஷ ராசியில் வியாழன் பெயர்ச்சி நிகழும் போது, ராகு கிரகம் ஏற்கனவே அங்கு இருக்கும் என்பதால், இந்த இரு கிரகங்களின் இணைப்பால், குரு சண்டல் தோஷம் ஏற்படும்.அதையடுத்து செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை 04:58 மணிக்கு, வியாழன் வக்ர் கதியில் நகரத் தொடங்குவார். அதன் பிறகு, இந்த ஆண்டின் கடைசி நாளான 31 டிசம்பர் 2023 அன்று காலை 07:08 மணிக்கு வக்ர கதியில் இருந்து வெளியே வருவார குரு பகவான்.

மேலும் படிக்க | 15 நாட்களுக்குள் 2 முறை பெயரும் சனீஸ்வரரால் கொள்ளை பணம் சம்பாதிக்கப் போகும் ராசிகள் 

வியாழனின் பார்வை, புனித நீரைப் போல மங்களகரமானதாக கருதப்படுகிறது. வியாழனின் பார்வை பட்ட வீடுகளில் மங்கலமான விஷயங்கள் நடக்கும், முன்னேற்றம் ஏற்ப்டும், சுப காரியங்கள் நடக்கும். வெற்றி மற்றும் செழிப்புக்கான காரணி மற்றும் முன்னோடியான வியாழன் கிரகம், தனது இயக்கத்தை மாற்றுவதால் அதன் தாக்கம்  அனைத்து ராசிகளிலும் வெவ்வேறு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.   

அதில் 3 ராசிக்காரர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்

வியாழன் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மங்கும்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வியாழன் உங்கள் எட்டாம் வீட்டிற்கும் பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியாக இருக்கிறார். குருப் பெயர்ச்சியால், உங்களுக்கு பிரச்சனைகள் அதிகமாகலாம். வியாழன் உங்கள் ராசிக்கு எதிரி என்பதால் கவனமாக இருக்கவும். வியாழன் பெயர்ச்சி சமயத்தில், தனது சொந்த ராசியை விட்டு வெளியேறி உங்கள் பன்னிரண்டாவது வீட்டிற்குள் நுழையும் போது உங்கள் செலவுகள் அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும்.  

மேலும் படிக்க | ராகுவுடன் இணைந்து குரு சண்டாள யோகம் தரும் குருப் பெயர்ச்சி! திருமணத் தடைகள் நீங்கும்

கன்னி 
கன்னி ராசிக்காரர்களுக்கு வியாழன் பெயர்ச்சி 2023 அவர்களின் எட்டாவது வீட்டில் நடக்கும். வியாழன் உங்கள் நான்காவது மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதிஎன்பதால் இந்த சஞ்சாரம் அவ்வளவு செழிப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்கலாம். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடை நீடிக்கும். கவனமாக நிதி முதலீடு செய்வது நஷ்டத்தை தவிர்க்க உதவும்.

விருச்சிகம் 
உங்கள் ராசியிலிருந்து வியாழன் ஆறாவது வீட்டிற்குச் செல்லும் வியாழன், உங்கள் இரண்டாவது வீட்டிற்கும் ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதி. வியாழன் உங்கள் ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு அவ்வளவு செழிப்பாக இருக்காது. வியாழன் உங்கள் ஆறாவது வீட்டில் சஞ்சரிக்கும் போது, சூரியன், புதன் மற்றும் ராகு இருப்பதால் சதுர்கிரஹி தோஷம் ஏற்படும். இது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூரியன்-சனி: இந்த ராசிகளுக்கு இது ஜாக்பாட் நேரம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News