குரு பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்: அட்டகாசமாய் வாழவைப்பார் குரு

Guru Peyarchi: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இது மிகவும் சுபமானதாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2024, 08:45 AM IST
  • ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி ஆவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
  • தடைபட்டிருந்த உங்கள் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும்.
  • பணியிடத்தில் உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கப்படும்.
குரு பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்: அட்டகாசமாய் வாழவைப்பார் குரு title=

Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த ராசி மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து கிரகங்களுக்கும் தனித்துவமான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. கிரகங்களில் பொதுவாக குரு பகவானும், சனி பகவானும் மிக முக்கியமான கிரகங்களாக பார்க்கப்படுகின்றன.

இந்த இரு கிரகங்களுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஆகையால் இவற்றின் பெயர்ச்சிகளும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றன.

இன்னும் சில நாட்களில் மிகவும் சுபமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் பெயர்ச்சியாக உள்ளார். குரு தற்போது தனது சொந்த ராசியான மேஷ ராசியில் இருக்கிறார். மே ஒன்றாம் தேதி அவர் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆவார். சுமார் ஒரு ஆண்டு காலத்திற்குப் பிறகு குருவின் பெயர்ச்சி நடக்கின்றது.

குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இது மிகவும் சுபமானதாக இருக்கும். இவர்களுக்கு நல்ல காலம் துவங்கும். இவர்களுடைய அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நிதிநிலை முன்னேற்றம் காணும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். குரு இவர்களுக்கு பல சுபமான பலன்களை அளிப்பார். உங்கள் பொருளாதார நிலை முன்பை விட நன்றாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். எனினும் பண வரவும் நன்றாக இருக்கும் என்பதால் நிதி நெருக்கடி ஏற்படாது. இந்த குரு பெயர்ச்சி காலத்தில் புதிய பணிகளை துவக்கினால் அவை வெற்றிகரமாக நடந்து முடியும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும், குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | உதயமாகிறார் சனி: இந்த ராசிகள் மீது சனி அருள்..... ராஜவாழ்க்கை, பணக்கார யோகம் ஆரம்பம்

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசி காரர்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்த்துப் போகும். மகிழ்ச்சிகரமான குடும்ப சூழல் அமையும். குருவின் அருளால் உங்கள் நிதி நிலையும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலம் இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மன நிம்மதி நிலைத்திருக்கும்.

கன்னி (Virgo)

ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி ஆவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். தடைபட்டிருந்த உங்கள் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும். பணியிடத்தில் உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கப்படும். அதை மிகவும் கவனத்துடன் செய்து முடித்தால் உங்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணி நிமித்தமாக நீங்கள் வெளிநாடு செல்லக்கூடும். இந்த பயணத்தால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அனைத்து பணிகளிலும் நாட்டம் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News