21 ஆண்டுகளுக்குப் பிறகு குருவின் அபூர்வ நிகழ்வு.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

Jupiter Retrograde Effect 2023: குரு சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமாக கருதப்படுகிறது. தேவகுரு வியாழனின் ராசி மாற்றம் ஏறக்குறைய அனைத்து ராசிகளிலும் நன்மையும் தீமையும் ஏற்படுத்தும் என்று ஜோதிடம் நம்புகிறது. ஜோதிடத்தின்படி, ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாக இருந்தால், அந்த நபரின் குடும்பம், தொழில் மற்றும் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 1, 2023, 12:47 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி நன்மை பயக்கும்.
  • சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் குரு வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது.
  • கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு குருவின் அபூர்வ நிகழ்வு.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் title=

குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் தன் ராசியை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும். கிரகங்களின் இந்த ராசி மாற்றங்களின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படுகிறது. கிரகங்களின் இந்த ராசி மாற்றம் சிலருக்கு சுபமாக அமையும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இது அசுபமாக அமையும். சில நேரங்களில் இந்த கிரகங்கள் தங்கள் நட்பு ராசிகளில் நுழைகின்றன, சில நேரங்களில் எதிரி ராசிகளில். இந்த வரிசையில், தெய்வங்களின் குரு என்று அழைக்கப்படும் வியாழன் மேஷ ராசியில் சஞ்சரித்து, இப்போது அது வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ள இந்த குரு வக்ர பெயர்ச்சி காரணத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலன்களையும் முன்னேற்றத்தையும் பெறப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

கடக ராசி: குருவின் வக்ர பெயர்ச்சி இயக்கம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். கடக ராசிக்காரர்களின் கர்ம வீட்டில் குரு வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது. இது தவிர, கடகத்தின் ஆறாம் மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கும் வியாழன் அதிபதி ஆவார். எனவே, இந்த நேரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும், நீதிமன்றத்தில் சிக்கிய விஷயங்கள் தீர்க்கப்படும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். புனித யாத்திரை செல்லவும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க |  இந்த ராசிக்காரர்களை குபேரருக்கு ரொம்ப பிடிக்கும்.. அபரிமிதமான செல்வம் பொழிவார்

சிம்ம ராசி: குருவின் வக்ர பெயர்ச்சி (Jupiter Retrograde 2023) இயக்கம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். சிம்ம ராசிக்காரர்களின் (Leo Zodiac Sign) அதிர்ஷ்ட ஸ்தானத்தில் குரு வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது. வியாழன் கிரகம் சிம்ம ராசியின் ஐந்தாம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி ஆவார். இதன் போது பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு இது நல்ல நேரம். இதன் போது உங்கள் தடைபட்ட வேலைகள் முடிவடையும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வருமானம் உயரும், குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர இயக்கம் நன்மை பயக்கும். தனுசு ராசியின் (Scorpio) ஐந்தாம் வீட்டில் குரு வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது. இந்த நேரத்தில், தனுசு ராசிக்காரர்கள் காதல் விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள். குழந்தை வேண்டும் என்று விரும்புபவர்கள் குழந்தை பெறலாம். வியாழன் உங்கள் ராசியிலிருந்து லக்னம் மற்றும் நான்காம் வீட்டிற்கு அதிபதி ஆவார் . இந்த நேரத்தில் நீங்கள் ஒரு சொத்து அல்லது வாகனம் வாங்க உங்கள் மனதை உறுதி செய்யலாம். மதம் மற்றும் ஆன்மீகத் துறையுடன் தொடர்புடையலாம். இந்த நேரம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குரு உங்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதால், குரு வளர பெயர்ச்சி இயக்கம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சிம்மத்தில் இருந்து கன்னிக்கு பெயரும் செவ்வாய் பகவானால் பணமழையில் நனையும் ராசி உங்களுடையதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News