கும்பத்திற்குள் வரும் சந்திரன்... உருவாகும் விஷ யோகம் - பணப் பிரச்னையை சந்திக்கும் இந்த ராசிகள்

Shani Moon Yuti: சனியுடன் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால், இந்த 3 ராசிகளுக்கு பணப் பிரச்னைகள் ஏற்படும். இதுகுறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 8, 2023, 07:47 PM IST
  • நாளை காலை 6.02 மணிக்கு சந்திரன் கும்ப ராசிக்குள் நுழைக்கிறார்.
  • சனி ஏற்கெனவே கும்ப ராசியில் இருக்கிறார்.
  • சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை நாட்கள் இருக்கிறார்.
கும்பத்திற்குள் வரும் சந்திரன்... உருவாகும் விஷ யோகம் - பணப் பிரச்னையை சந்திக்கும் இந்த ராசிகள் title=

Shani Moon Yuti: ஜோதிட சாஸ்திரத்தின்படி, பல சுப மற்றும் அசுப யோகங்கள் இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகின்றன. இந்த யோகங்கள் சிலருக்கு சுபமாகவும், பலனளிக்கவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். ஜூன் 9ஆம் தேதி காலை 6:02 மணிக்கு சந்திரன் மகர ராசியில் இருந்து வெளியேறி கும்ப ராசிக்குள் நுழைவார் என்று தெரிவிக்கப்படுகிறது. 

சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை நாட்கள் இருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், கும்ப ராசியில் நுழைவதால் சனியுடன் சந்திரனின் சேர்க்கை அமையும். இவ்விரு கிரகங்களும் ஒன்றாக இருந்தால் விஷ யோகம் உருவாகும். இதன் காரணமாக, பல ராசிக்காரர்கள் பணப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் கெடுதல் தரும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 

இந்த ராசிக்காரர்களுக்கு விஷ யோகம் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்

மேலும் படிக்க | மீனத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட்.. திகட்ட திகட்ட மகிழ்ச்சி!!

கன்னி

ஜோதிடத்தின் படி, இந்த ராசியின் ஐந்தாம் மற்றும் ஆறாவது வீட்டிற்கு அதிபதி சனி தேவன். இந்த நேரத்தில் சனி இந்த ராசிக்கு ஆறாம் வீட்டில் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சனி, சந்திரன் இணைவதால் விஷ யோகம் உருவாகி வருகிறது. இது இந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்களை உண்டாக்கும். இதன் போது இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மோசமான பாதிப்புகள் ஏற்படும். பிள்ளைகளின் தொழில் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எதிரிகள் மீண்டும் உங்களைத் தாக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிகமாக போராட வேண்டியிருக்கும்.

விருச்சிகம்

சந்திரன் மற்றும் சனியின் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம் விருச்சிக ராசிக்காரர்களின் கஷ்டங்களையும் அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சொத்து சம்பந்தமாக குடும்ப உறுப்பினர்களுக்குள் தகராறு ஏற்படும். இல்லையெனில், உங்கள் பண இழப்பு போன்றவை ஏற்படலாம்.

கும்பம்

இந்த ராசியில் விஷ யோகம் உருவாகி வருகிறது. கும்ப ராசிக்காரர்களின் வாழ்வில் பல பிரச்சனைகள் வரலாம். இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இந்த நேரத்தில், வேலை செய்பவர்கள் பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் ஈகோவைக் கட்டுப்படுத்துங்கள். இல்லையெனில் அது ஆபத்தாக முடியும். தொழில், உத்தியோகம் போன்றவற்றுடன் குடும்பத்தில் அதன் மோசமான விளைவுகளும் காணப்படும்.

மேலும் படிக்க | சனி, புதன் உருவாக்கும் 2 பெரிய ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News