இன்று குரு பெயர்ச்சி: இனி 'ஜே ஜே' என வாழப்போகும் இந்த 5 ராசிகள்!

குரு பெயர்ச்சி 2023: அட்சய திருதியை நாளான இன்று, குரு பகவான் மேஷ ராசியில் நுழைகிறார். குரு பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்த ஐந்து ராசிகளுக்கு மிகப்பெரிய பலன்களை தரும்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 22, 2023, 03:18 PM IST
  • 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு, மேஷ ராசியில் நுழைகிறார்.
  • இந்த 5 ராசிகளுக்கு மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், முன்னேற்றம், செல்வம் ஆகியவற்றை தருவார்.
இன்று குரு பெயர்ச்சி: இனி 'ஜே ஜே' என வாழப்போகும் இந்த 5 ராசிகள்! title=

குரு பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின் படி, தேவகுரு என அழைக்கப்படும் வியாழன் வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறார். ஏப்ரல் 22 ஆம் தேதியான குரு பகவான், மேஷ ராசியில் நுழைகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு மேஷ ராசியில் நுழைகிறார். 

அதுமட்டுமின்றி, இன்று அக்ஷய திருதியை. அத்தகைய ஒரு நல்ல நாளில் வியாழனின் பெயர்ச்சி நிலைமையை இன்னும் கூடுதல் சிறப்பாக்குகிறது. அடுத்த ஒரு வருடத்திற்கு குரு பகவான், மேஷ ராசியில் இருப்பார். மேலும், இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மறுபுறம், 5 ராசிக்காரர்களுக்கு குரு மிகவும் சுப பலன்களைத் தருவார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம். இவர்களுக்கு குரு மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் செல்வத்தை தருவார். 

மேஷம்

மேஷ ராசியில், குரு நுழைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் ஏற்படும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் ஆளுமையின் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண முயற்சிகள் வரும்.

மேலும் படிக்க | புதனின் ராசியில் சுக்கிரன், மூன்று ராசிகளுக்கு பண மழை கொட்டும்

ரிஷபம் 

ரிஷபம் ராசிக்காரர்களுக்கும் குரு பெயர்ச்சி நன்மைகளைத் தரும். உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும். பழைய பிரச்சனைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். யோகா, ஆயுர்வேதம் அல்லது ஜோதிடம், வாஸ்து போன்றவற்றை  கற்றுக்கொள்வீர்கள். முதலீடு செய்ய நல்ல நேரமாக இருக்கும்.

மிதுனம் 

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சுப பலன்களைத் தரும். இவர்கள் உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் வளரும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எந்த சாதனையையும் படையார்கள். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் இந்த ராசி மாற்றம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் தரும். செயல்களில் வெற்றி உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். யாத்திரை செல்லலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. கல்வியில் ஆதாயம் உண்டாகும்.

கன்னி 

குருவின் சஞ்சாரம் கன்னி ராசியினருக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வலுவான லாபம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News