இன்னும் நாலே நாள்! 3 ராசிகளுக்கு ஜாக்பாட் யோகம் வழங்கும் குரு பகவானின் வக்ரப் பெயர்ச்சி

Guru vakri 2023: தேவகுரு பிரகஸ்பதி விரைவில் மேஷ ராசியில் வக்ர கதியில் இயங்கப்போகிறார். குரு பகவானின் இந்த மாற்றம் சிலரின் அதிர்ஷ்டத்தை தலைகீழாக மாற்றும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 31, 2023, 08:17 AM IST
  • குரு பகவானின் வக்ர இயக்கம்
  • அதிர்ஷ்டத்தை தலைகீழாக மாற்றும் குரு
  • மங்களத்தை அருளும் குரு பகவானின் இயக்க மாற்றம்
இன்னும் நாலே நாள்! 3 ராசிகளுக்கு ஜாக்பாட் யோகம் வழங்கும் குரு பகவானின் வக்ரப் பெயர்ச்சி title=

மேஷத்தில் குரு 2023: ஒருவரின் ஜாதகத்தில் குரு வலுவான நிலையில் இருந்தால், அந்த நபர் வாழ்க்கையில் நல்ல ஒழுக்கத்துடன் நடந்துக் கொள்வதுடன், திருப்தி, சந்தோஷம் மற்றும் நிம்மதி என சகல செளபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழ்கிறார். ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நிலை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால், சுபமாக கருதப்படும் வியாழனின் வக்ர இயக்கம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்பதால் அனைவரும் குரு பகவானுக்கு ப்ரீதி செய்வார்கள். ஆனால், ஜாதகத்தில் குருவின் இடம் சரியான இடத்தில் அமைந்திருந்தால், இயல்பாகவே நல்லது நடக்கும். குரு பகவான் மேஷ ராசியில் 04 செப்டம்பர் 2023 அன்று வக்ர நிலையை அடைகிறார்.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: இன்னும் சில நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

வியாழனின் சஞ்சார மாற்றம், 3 ராசிக்காரர்களுக்கு அருமையான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப்போகிறது. இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நிறைய செல்வத்தையும் பெரிய வெற்றியையும் பெறலாம். வக்ர கதியில் இயங்கும் வியாழன் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபபலன்களைத் தரப்போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.

குரு பகவானின் வக்ரப் பெயர்ச்சியால்அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் இவை...

மேஷம்: வியாழன் மேஷ ராசியில் பிற்போக்கு நிலையில் சஞ்சரிப்பதால், மேஷ ராசியினருக்கு நம்பிக்கை அதிகரிக்கும். ஆற்றல் நிறைந்தவராக இருப்பீர்கள். எந்தவொரு புதிய திட்டத்தையும் அல்லது வேலையையும் தொடங்க இதுவே சிறந்த நேரம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும், ஒன்றன் பின் ஒன்றாக வெற்றி பெறுவீர்கள். பண வரத்து அதிகரிக்கும், முதலீடுகள் மற்றும் சேமிக்கும் திறன் அதிகரிக்கும், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாழனின் தலைகீழ் சஞ்சாரம் உங்களுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தைத் தரும். வீட்டிலும், குடும்பத்திலும் சுப நிகழ்வுகள் நடைபெறும், அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களிடம் கருணை காட்டும் குரு, மேலும் முன்னேற வாய்ப்புகளை வழங்குவார். பதவியும் கௌரவமும் மட்டுமல்ல பணமும் கிடைக்கும். பயண வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். காதல் விவகாரங்களில் வெற்றி பெறலாம்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு வியாழனின் பிற்போக்கு சஞ்சாரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்கள் தாம்பத்திய வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பார்கள். தனியாக இருப்பவர்கள் துணையை பெறலாம். தொழில் மற்றும் நிதி நிலையும் மேம்படும். வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு இருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். உங்கள் தைரியமும், துணிச்சலும் உங்களுக்கு எல்லா வேலைகளிலும் வெற்றியைத் தரும்.

குரு கிரகங்களில் பெரியவர். அவரே, வளர்ச்சி அல்லது விருத்திக்கு காரணகர்த்தா என்பதால் குரு பகவான் நமது வாழ்க்கையின் சுகத்தையும், கஷ்டத்தையும் தீர்மானிக்கிறார், குருவின் அருளைப் பெற வியாழனன்று குருவை வழிபடுவதும், கோவிலுக்கு சென்று அன்னதானம் செய்வதும் நற்பலன்களை அதிகரிக்கும்.

(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியின் தீய பார்வை விலக... குபேர அருள் கிடைக்க.. வன்னி மரச்செடியை நடவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News