மே மாத பலன்கள்.. இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்

May 2024 Monthly Horoscope: மே மாதம் 4 ராசிக்காரர்களுக்கு பல ஜாக்பாட் பரிசுகளை கொண்டு வரப் போகிறது. இந்த மாதத்தில் சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு ஒவ்வொரு படியிலும் வெற்றி கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 30, 2024, 05:23 PM IST
  • பழைய முதலீடுகளில் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.
  • பொருளாதார ரீதியாக லாபம் அடைவார்கள்.
  • வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவீர்கள்.
மே மாத பலன்கள்.. இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் title=

May 2024 Monthly Horoscope: மாதாந்திர ஜோதிடத்தின் படி 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மே மாதத்தில் பிரகாசமாக்கும். மே மாதம் நிகழும் குரு பெயர்ச்சி, சூரியப் பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி ஆகியவை 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் மே 1 ஆம் தேதி, அதாவது நாளை குரு பெயர்ச்சி நடக்கப் போகிறது. இதற்குப் பிறகு, மே 10 அன்று புதன் கிரகம் தனது ராசியை மாற்றுவார். அதன் பிறகு மே 19 ஆம் தேதியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைவதால் ரிஷப ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை நடைபெறும். இதற்கிடையில், மே 14 ஆம் தேதி சூரியப் பெயர்ச்சியும் நடைபெறும். இப்படி முக்கியமான இந்த 4 கிரகங்களின் மாற்றம் சுப, அசுப பலன்களைத் தரும். ஆனால் 12 ராசிகளில் 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மட்டும் பிரகாசிக்கும். இந்த ராசிக்காரர்கள் இந்த கிரகப் பெயர்ச்சிகளின் சுப பலன்களால் பெரிய அளவில் பலன் அடைவார்கள். எனவே மே மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் ராசிக்காரர்கள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

மே 2024 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள் இவையே

மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு மே மாதம் பணப் பலன்கள் கிடைக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். உங்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு வாழ்க்கையில் இனி கொண்டாட்டம் தான்..!

ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மே மாதம் முதல் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். புதிய பாதைகள் திறக்கப்படும். புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணத்தை இப்போது திரும்பப் பெறலாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். நீங்கள் ஏதேனும் சர்ச்சையில் சிக்கியிருந்தால், இப்போது அதிலிருந்து மீளலாம். 

சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு மே மாதம் வரப்பிரசாதமாக அமையும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பல பொன்னான வாய்ப்புகளைப் பெறலாம். அலுவலகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். மேலதிகாரியின் உதவியைப் பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தொழிலதிபர்களும் பொருளாதார ரீதியாக லாபம் அடைவார்கள். செல்வம் பெருகும். பழைய முதலீடுகளில் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.

மகரம் (Capricorn Zodiac Sign): மே மாதம் மகர ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் பல பெரிய மற்றும் சாதகமான மாற்றங்களை கொண்டு வரும். தொழில் சம்பந்தமான நல்ல தகவல்களைப் பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய இடத்திற்கு புதிய வேலை, பதவி உயர்வு அல்லது இடமாற்றம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. வேலை வாய்ப்பை பெறலாம். வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சுக்கிரன் அஸ்தமனம்... நெருக்கடிகளை சந்திக்கும் சில ராசிகளும்... சில பரிகாரங்களும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News