குரு பெயர்ச்சி பலன் 2024.. ரிஷபத்தில் நுழையும் குரு.. இந்த ராசிகளுக்கு குபேர யோகம்

Guru Gochar 2024: 2024 ஆம் ஆண்டில், வியாழன் தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்கு மாறுகிறார். இதன் மூலம் சில ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் மகத்தான வெற்றிகள் கிடைக்கும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 21, 2023, 03:26 PM IST
  • ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால், தொழில் மற்றும் வியாபாரத்தில் விரும்பிய வெற்றி கிடைக்கும்.
  • தற்போது தேவகுரு வியாழன் மேஷ ராசியில் இருக்கிறார்.
  • அடுத்த ஆண்டு, மே 1 ஆம் தேதி, வியாழன் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
குரு பெயர்ச்சி பலன் 2024.. ரிஷபத்தில் நுழையும் குரு.. இந்த ராசிகளுக்கு குபேர யோகம் title=

ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி 2024: சனாதன தர்மத்தில் ஜோதிடம் சிறப்பு வாய்ந்தது. ஜோதிடத்தின்படி, ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால், அந்த நபர் தனது விருப்பப்படி தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுகிறார். இதனுடன் எல்லாவிதமான மகிழ்ச்சியையும் பெறுகிறார். எனவே, தற்போது தேவகுரு வியாழன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். அடுத்த வருடம் மேஷ ராசியிலிருந்து குரு விலகி ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி அடைவார். வியாழன் ராசியில் ஏற்படும் இந்த மிகப் பெரிய மாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சாதகமான பலனைத் தரும். இருப்பினும் நான்கு ராசிக்காரர்கள் மட்டும் அதிக பலன்கள் கிடைக்கும். இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு வருமானமும், அதிர்ஷ்டமும் அபரிமிதமாக அதிகரிக்கும். வாருங்கள், இந்த 4 அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்-

குரு கிரகத்தில் ஏற்படும் மாற்றங்கள்:
தற்போது குரு மேஷ ராசியில் வக்ர நிலையில் நகர்கிறது. டிசம்பர் 31 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி அடைந்து நேரடியாக நகரத் தொடங்குவார். அதே சமயம் அக்டோபர் 30 ஆம் தேதி ராகு, கேதுவும் தங்கள் ராசியை மாற்றுகிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் இதனால் பலன் அடைவார்கள். ஏனெனில் இதன் மூலம் மேஷ ராசிக்காரர்கள் குரு சண்டால் தோஷத்தில் இருந்து விடுபடுவார்கள். அதேசமயம், அடுத்த ஆண்டு மே 1 ஆம் தேதி, குரு மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

மேலும் படிக | 30 ஆண்டுக்குப் பிறகு சனியால் அதிசய யோகம்.. இந்த ராசிகளின் காட்டில் பணமழை

மேஷ ராசி
தற்போது, குரு வியாழன் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். அடுத்த ஆண்டு ரிஷபத்தில் குரு பெயர்ச்சியின் போது, ​​குரு மேஷத்தின் செல்வ வீட்டில் அமரவார். இந்த காலகட்டத்தில், மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் கூடும். இந்த காலகட்டத்தில், எடை அதிகரிப்பு அல்லது உடல் பருமன் பிரச்சனை ஏற்படலாம். குடும்பத்தில் உங்களின் புகழ் உயரும். திடீர் பண ஆதாயம் கூடும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.

கடக ராசி
குரு தனது ராசியை மாற்றி, கடக ராசியின் வருமான வீட்டில் அமர்வார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும். பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மொத்தத்தில் கடக ராசிக்காரர்களுக்கு வியாழன் ராசி மாற்றம் பலன் தரும்.

சிம்ம ராசி
2024 ஆம் ஆண்டில், குரு தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்கு மாறுகிறார். இந்த நேரத்தில், தேவகுரு வியாழன் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் வீட்டில் தனது பார்வையை செலுத்துவார். இதன் மூலம் சிம்ம ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அமையும். வருமானம் அதிகரிக்கும். அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே பாசமும் அன்பும் அதிகரிக்கும்.

கன்னி ராசி
அடுத்த ஆண்டு, வியாழன் கன்னியின் அதிர்ஷ்ட வீட்டில் அமர்கிறார். ஜோதிடத்தின் படி, அதிர்ஷ்ட வீட்டில் செவ்வாய், வியாழன் மற்றும் சூரியன் இருந்தால், அந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை கிடைக்கும். இதன் மூலம் கன்னி ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக பலன் பெறலாம். சிக்கிய பணத்தை திரும்பப் பெறுவீர்கள். நிலம், வாகனம் வாங்கும் வாய்ப்பும் அமையும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அபூர்வ 'தன ராஜயோகம்' - இனி இந்த 3 ராசிக்காரர்களின் வீடுகளில் ஒரு மாதத்திற்கு பணமழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News