குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஆரம்பம் ஆனது பொற்காலம்

Guru Vakra Peyarchi: மீனத்தில் குரு பிற்போக்கு நிலையில் இருப்பது அனைத்து ராசிகளிலும் பல வித தாக்கங்களையும் ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றத்தால் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 1, 2022, 03:02 PM IST
  • மேஷ ராசிக்கார்ரகளுக்கு குருவின் இந்த மாற்றம் அனுகூலமாக இருக்கும்.
  • வெளிநாட்டு பயணம் சாத்தியமாகும்.
  • வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் இப்போது அமையும்.
குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஆரம்பம் ஆனது பொற்காலம் title=

குரு வக்ர பெயர்ச்சி 2022: வியாழக்கிழமை, ஜூலை 29 அன்று குரு பகவான் வக்ரமானார். குரு வக்ர நிலையில் இருப்பது ஜோதிடத்தில் பெரிய நிகழ்வாக கருதப்படுகின்றது. குரு பகவானின் பிற்போக்கு நிலையால் பல ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழியும். மனிதர்களின் வாழ்க்கையில் கல்வி, திருமணம், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக குரு பகவான் கருதப்படுகிறார். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய ராசிகளின் அதிபதியாக குரு பகவான் உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் அமர்ந்திருந்தால் அவருக்கு கல்வி, வேலை, பணம், திருமணம் போன்றவற்றில் எந்தக் குறைவும் இருக்காது. ஆகையால், ஜாதகத்தில் வியாழனின் நிலை சிறப்பாகக் கருதப்படுகின்றது. மீனத்தில் குரு பிற்போக்கு நிலையில் இருப்பது அனைத்து ராசிகளிலும் பல வித தாக்கங்களையும் ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றத்தால் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்

மேஷ ராசிக்கார்ரகளுக்கு குருவின் இந்த மாற்றம் அனுகூலமாக இருக்கும். வெளிநாட்டு பயணம் சாத்தியமாகும். வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் இப்போது அமையும்.

ரிஷபம்

வக்ர குரு செல்வ யோகத்தை கொண்டு வந்துள்ளார். வெவ்வேறு வருமான ஆதாரங்கள் இப்போது உருவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 

மேலும் படிக்க | ஆகஸ்ட் மாத ராசிபலன்: உங்க ராசிக்கு எப்படி இருக்கு? யாருக்கு ஆதாயம்? யாருக்கு ஆபத்து?

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த வேளையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேளையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். 

சிம்மம்

பல வழிகளில் பண வரவு இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். இந்த நேரத்தில் திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மிகவும் கவனமாக பழக வேண்டும். பேச்சில் கவனம் தேவை.

கன்னி

வணிகத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். கூட்டுத் தொழில் மூலம் இப்போது லாபம் காணலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆன்மீக பயணத்தில் செல்வீர்கள். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.

தனுசு

நீங்கள் வீடு வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே அதற்கு சிறந்த நேரம். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் ஆகாத தனுசு ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் கைகூடும். 

மீனம்

ஆன்மீக பணிகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதோடு சரியான இடத்தில் பணத்தை முதலீடு செய்வீர்கள். இப்போது முதலீடு செய்யும் பணத்தால் எதிர்காலத்தில் நல்ல லாபம் காணலாம். வியாபாரத்தில் தொல்லைகள் ஏற்படும், ஆனால் அதிலும் உங்களுக்கு ஆதாயமான வாய்ப்புகள் கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | குருவின் அருளால் அடுத்த 120 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News