ராகு பெயர்ச்சி: நஷ்டம், துரோகம், ஏமாற்றம்.... இந்த ராசிகளுக்கு 18 மாத 'ஹை அலர்ட்' காலம்

Rahu Peyarchi: சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் பிரச்சனைகள் வரக்கூடும். இவர்களுக்கு பண விரயம் ஏற்படலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 5, 2023, 02:01 PM IST
  • ராகுவின் ராசி மாற்றத்தின் தாக்கம் கும்ப ராசிக்காரர்களுக்கு தெளிவாகத் தெரியும்.
  • ராகு சஞ்சாரம் உங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • ராகு பெயர்ச்சி தாக்கத்தின் விளைவாக நீங்கள் நிதி நெருக்கடியையும் சந்திக்க நேரிடும்.
ராகு பெயர்ச்சி: நஷ்டம், துரோகம், ஏமாற்றம்.... இந்த ராசிகளுக்கு 18 மாத 'ஹை அலர்ட்' காலம் title=

ராகு பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ராகு அக்டோபர் 30, 2023 அன்று மீன ராசியில் பெயர்ச்சி ஆனார். இதற்கு முன் ராகு மேஷ ராசியில் இருந்தார். ராகுவும் கேதுவும் எப்போதும் வக்ர நிலையில் அதாவது மற்ற கிரகங்களின் இயக்க திசைக்கு மாறான திசையில் செல்லும் கிரகங்கள் ஆகும். இவை நிழல் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. 

ராகு 18 மாதங்கள், அதாவது மே 18, 2025 வரை, மீன ராசியில் இருப்பார். அதன் பிறகு அவர் கும்ப ராசிக்கு மாறுவார். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராகுவின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் சில பிரச்சனைகள் வரக்கூடும். இவர்களுக்கு பண விரயம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் இவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ராகு பெயர்ச்சியால் சங்கடங்களை சந்திக்கவுள்ள ராசிகள் 

மேஷ ராசி (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சியின் தாக்கம் தெளிவாகத் தெரியும். இந்த காலகட்டத்தில், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். நிதிச் சிக்கல்களும் உங்களைத் தொந்தரவு செய்யும். உங்கள் பணம் எங்காவது சிக்கிக்கொள்ளலாம். இதை மனதில் கொண்டி நிதி ரீதியான முடிவுகளை எடுப்பது நல்லது. கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 

சிம்ம ராசி (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சியால் சில பிரச்சனைகள் உருவாகலாம். சிம்ம ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். யாருடனும் தேவையற்ற சச்சரவுகள் வேண்டாம். பணியிடத்தில் மக்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பலாம். சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் தகராறும் ஏற்படலாம். எந்த ஒரு வேலையைச் செய்வதற்கு முன்பும் பலமுறை யோசிக்க வேண்டும். ஒரு சிறு தவறான நடவடிக்கையும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். 

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடைந்தார் சனி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்.. பண மழையில் நனைவார்கள்

தனுசு ராசி (Sagittarius)

தனுசு ராசிக்காரர்கள் ராகுவின் இந்த பெயர்ச்சி காரணமாக மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். நீங்கள் டென்ஷன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகலாம். இதனால் மன வருத்தம் அதிகமாகலாம். குடும்பத்தில் சகோதர சகோதரிகளிடையே கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். இந்த 18 மாதங்களில் நீங்கள் பல முறை நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

கும்ப ராசி (Aquarius) 

ராகுவின் ராசி மாற்றத்தின் தாக்கம் கும்ப ராசிக்காரர்களுக்கு தெளிவாகத் தெரியும். ராகு சஞ்சாரம் உங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பெயர்ச்சி தாக்கத்தின் விளைவாக நீங்கள் நிதி நெருக்கடியையும் சந்திக்க நேரிடும்.குடும்பத்தில் சகோதர சகோதரிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ராகுவின் இந்த பெயர்ச்சி காலத்தில் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். மக்கள் உங்களுக்கு எதிராக திரும்பலாம்.

மீன ராசி (Pisces)

மீனத்தில் ராகுவின் சஞ்சாரம் மீன ராசியினரையும் ஓரளவுக்கு தொந்தரவு செய்யும். இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு வயிறு சம்பந்தமான சில நோய்கள் இருக்கலாம். சோம்பேறித்தனத்தை கைவிட்டு, உங்கள் வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் நிதி சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க | தீபாவளிக்குப் பிறகு விருச்சிக ராசியில் சௌபாக்கிய சங்கராந்தி! சிம்மத்திற்கு நல்லது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News