அடுத்த 4 மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் நிச்சயம்

Vakri Guru 2022: இந்த ராசிக்காரர்கள் 4 மாதங்கள் ஜாலியாக இருப்பார்கள், வக்கிர குரு வியாபாரத்தில் அமோக லாபம் தருவார்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 8, 2022, 12:57 PM IST
  • வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும்.
  • வக்ர குருவின் பலன் யாருக்கு நன்மை தரும்.
  • ஜூலை 29 ஆம் தேதி வக்ர குரு பெயர்ச்சி நடந்தது.
அடுத்த 4 மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் நிச்சயம் title=

குரு பகவான் வியாழனுக்கு ஜோதிடத்தில் மிக முக்கிய இடம் உண்டு. பொதுவாக குரு பகவான் அறிவு, செல்வம் மற்றும் குழந்தைகளின் காரக கிரகமாக கருதப்படுகிறார். அத்துடன் குரு பகவான் தனது ராசியை மற்ற 13 மாதங்கள் எடுக்கிறது. மேலும் குரு பகவானின் வியாழன் கிரகம் தனுசு மற்றும் மீனம் ஆகிய இரண்டு ராசிகளின் அதிபதியாக கருதப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி மீனத்தில் வக்ர நிலையில் குரு பகவான் பெயர்ச்சி ஆனார். அடுத்த 4 மாதங்களுக்கு அதாவது நவம்பர் 24 வரை இதே ராசியில் தான் இருப்பார் குரு பகவான். அந்த வகையில் மீனத்தில் வியாழன் பின்வாங்குவதால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு வக்ர குரு பலன்களை அள்ளித் தருவார்

ரிஷபம்
வியாழன் ரிஷப ராசியின் 11வது வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது அவர்களின் வருமானம் மற்றும் லாபத்தின் மதிப்பாகக் கருதப்படுகிறது. மீனத்தில் வியாழன் பின்வாங்குவதால், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். இதனுடன், அவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் இவர்கள் வியாபாரத்தில் அமோக லாபம் பெறுவார்கள். அதேபோல் முதலீடு செய்வதற்கு சாதகமான காலம் இது. தற்போது முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருக்கும்.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

கடகம் : வியாழன் கிரகம் கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்துள்ளது. இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தின் வீடாக கருதப்படுகிறது. இதன் மூலம் இவர்கள் வேலையில் பதவி உயர்வுக்கான பலனைப் பெறலாம். இதன் போது இந்த ராசிக்காரர்களின் தலைவிதியே மாறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும்.

கன்னி : வியாழனின் பிற்போக்கு நிலை காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும் . திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மனைவிக்கு கணவனின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெற்றோரின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மீனம் : மீன ராசியில் வியாழனின் பிற்போக்கு நிலை கலவையான பலனைத் தரும். தொழில் மற்றும் பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பம் மற்றும் மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

 மேலும் படிக்க | வரும் 6 நாட்கள் இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News