குரோதி ஆண்டில் ராகு கேது சஞ்சாரத்தால் யாருக்கு என்ன நன்மை? படுத்தி எடுப்பாரா கேது?

Krodhi Tamil New year : நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ராகு கேது சஞ்சாரத்தால், குரோதி ஆண்டில் யாருக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பான பதிவை பார்க்கலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 23, 2024, 12:35 PM IST
  • குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்
  • தமிழ் புத்தாண்டு ராகு கேது இயக்கம்
  • நிழல் கிரகங்களின் குரோதத்திற்கு ஆளாகும் ராசிகள்
குரோதி ஆண்டில் ராகு கேது சஞ்சாரத்தால் யாருக்கு என்ன நன்மை? படுத்தி எடுப்பாரா கேது? title=

இன்னும் ஒரே மாதத்தில் தமிழ் புத்தாண்டாக குரோதி ஆண்டு மலரப்போகிறது. இந்த தமிழ் ஆண்டில் அனைவருக்குமான ராசிபலன்கள் பொதுவானதாக இருக்கும். ஆனால், நிழல் கிரகங்களான ராகு கேதுவின் இயக்கம் யார் வாழ்க்கையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்துக் கொள்வோம்.

சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதியில் ராகு சஞ்சரிப்பார் என்றால், செவ்வாய் பகவானின் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பயணிப்பார். தினசரி வாழ்க்கையில் நமது செயல்பாடுகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ராகு கேதுவின் செயல்பாடு யாருக்கு என்ன செய்யும்? இந்தக் கட்டுரையில், ராகு கேது சஞ்சாரத்தால், குரோதி ஆண்டில் யாருக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பான பதிவை பார்க்கலாம்.

குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்

மேஷம் - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்

ராகு கேது பெயர்ச்சி 2024 ஏழாவது வீட்டில் நடைபெறுவதால், திருமணம் ஆகாதவர்களுக்கு மாங்கல்ய யோகம் உண்டு. இத்தனை நாட்கள் தடையாகிக் கொண்டிருந்த வேலைகளால் கவலையில் இருந்த மேஷ ராசிக்காரர்களுக்கு இனி நன்மைகள் கிடைக்கும்.

ரிஷபம் - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்
 ரிஷப ராசிக்காரர்களுக்கு வெளி நாடுகளுக்கு செல்லும் பாதையை கொடுக்கும் நிழல் கிரகங்களால் நன்மை உண்டு. கேதுவின் செல்வாக்கு இருப்பதால் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.  

மிதுனம் - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டில் அலைச்சல் அதிகமாகும். காதல் உறவுகளில் சவால்கள் ஏற்படலாம். மாணவர்கள் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க | உதயமாகி இந்த ராசிகளை உச்சம் தொடவைப்பார் சனி: 5 ராசிகளுக்கு இது ஜாக்பாட் காலம்

கடகம்  - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்
கடக ராசிக்காரர்களுக்கு தாய்வழி உறவுகளில் சிக்கல் வரலாம். இருப்பினும், உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் பிரச்சனை ஏதும் இருக்காது.  

சிம்மம் - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்
தைரியத்தையும் மன உறுதியையும் வழங்கும் ராகு கேது சஞ்சாரம், உடன்பிறந்தவர்களுடன் மோதல்களை உருவாக்கலாம். ஆனால், சுயக் கட்டுபாடு அவசியம் என்பதை மறக்க வேண்டாம். 

கன்னி - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்
வாய் வார்த்தைகள் கூர்மையான கத்தியை விட அதிக சேதங்களை ஏற்படுத்திவிடும் என்பதை கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்.நீங்கள் நன்றாக பேசினால்கூட, அதை தவறாக புரிந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை நிழல் கிரகங்கள் ஏற்படுத்தும்.  

துலாம் - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்

சுயநல எண்ணங்கள் மேலோங்கும், இது வயதில் இளையவர்களுக்கு பரவாயில்லை என்றாலும், குடும்பத்தில் பெரியவர்களுக்கு தவறான விளைவைக் கொடுக்கும். எனவே, குடும்பத்தின் நலனை மனதில் வைத்து செயலாற்றுவது நல்லது.

மேலும் படிக்க | வருமானம் பெருகும் நாள்! மனதிற்கினியவர்களை சந்திக்கப் போகும் 2 ராசிகள்! இன்றைய தினபலன்!

விருச்சிகம் - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்

ஆன்மீகம் மற்றும் மதம் மீதான ஈர்ப்பை அதிகரிக்க கேது சஞ்சாரம் காரணமாகும். சுக்கிரன் அல்லது புதன் சஞ்சார மாற்றங்களின்போது கவனமாக இருக்கவும்.  

தனுசு - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்
 தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தர ராகு மற்றும் கேது தயாராகிவிட்டார்கள். சுக்கிரன் சாதகமாக இணைந்திருந்தால். கடின உழைப்புக்கு அபராமான பலன் கிடைக்கும். நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் தான் வீசப்போகிறது தனுசு ராசிக்காரர்களே!

மகரம் - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்
 மகர ராசிக்காரர்களை புத்திசாலித்தனமாக வேலை செய்ய தூண்டும் ராகு மற்றும் கேது சஞ்சாரம், குடும்பத்தில் பெரியவர்களுடன் வாக்குவாதத்தை ஏற்படுத்தலாம். மனதில் தோன்றியதை அப்படியே பேசிவிட வேண்டாம்.

கும்பம் - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்
ராகுவும் கேதுவும் கும்ப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தை அதிகரிப்பார்கள். இந்த சஞ்சாரத்தில் தந்தையுடனான இடைவெளி குறையும். நீண்ட தூர பயணங்களுக்கான வாய்ப்பு உண்டு

மீனம் - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்
ஆரோக்கியம் தொடர்பான சவால்களைக் கொடுக்கும் ராகு மற்றும் கேது சஞ்சாரம், மனதில் அமைதியை குலைக்கும். சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் தாக்கத்துடன் சேர்த்து ராகு கேது நல்ல பலன்களையே கொடுப்பார்கள்.  

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | மார்ச் மாத சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம்... பண வரவு அதிகமாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News