மீனத்தில் இணையும் சுக்கிரன் - ராகு... ஜாக்பாட் பலன்களை அனுபவிக்கும் சில ராசிகள்!

Sukran Peyarchi & Venus Rahu Conjunction: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகள் மட்டுல்ல, கிரக பெயர்ச்சிகளால் ஏற்படும் கிரக இணவுகளும் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வுகளாக கருதப்படுகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 24, 2024, 03:53 PM IST
  • கிரக சேர்க்கைகளால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுபபலன்களும் உருவாகின்றன.
  • ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையினால் பலன் பெறும் ராசிகள்.
  • சுக்கிரன் பெயர்ச்சியின் அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி அறிந்து காணலாம்.
மீனத்தில் இணையும் சுக்கிரன் - ராகு... ஜாக்பாட் பலன்களை அனுபவிக்கும் சில ராசிகள்! title=

Sukran Peyarchi & Venus Rahu Conjunction: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகள் மட்டுல்ல, கிரக பெயர்ச்சிகளால் ஏற்படும் கிரக இணவுகளும் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வுகளாக கருதப்படுகின்றன. கிரகங்கள் பெயர்ச்சியாகும் போது சில நேரங்களில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படுகின்றது. இந்த கிரக சேர்க்கைகளால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுபபலன்களும் உருவாகின்றன.

சுக்கிரன் ஆடம்ரமான வாழ்க்கை, செல்வ வளம், சுகம், மகிழ்ச்சி, பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி, மார்ச் மாதத்தில் இரு முறை நிகழ்கிறது. அந்த வகையில் மார்ச் மாத தொடக்கத்தில் பெயர்ச்சியாகிய சுக்கிரன், தற்போது மார்ச் 31ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். மீனத்தில் ஏற்கனவே ராகு உள்ள நிலையில், மீனத்தில் ராகு மற்றும் சுக்ரனின் சேர்க்கை நடைபெற உள்ளது.

சுக்கிரன் கிரகம் மார்ச் 31ம் தேதியன்று மாலை 4:31 மணிக்கு மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். ஏப்ரல் 24 ஆம் தேதி வரை அவர் இந்த ராசியிலேயே நீடித்து இருப்பார். மீனத்தில், ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்பட்ச பலன்கள் கிடைக்கும். குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் நிறைவடையும். பண வரவு அதிகமாகும். சுக்கிரன் பெயர்ச்சியின் அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி விரிவாக அறிந்து காணலாம்.

கடக ராசி  (Cancer Zodiac Sign)

கடக ராசியினருக்கு  சுக்கிரனின் பெயர்ச்சியினால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடைவதோடு, செல்வ வளமும் பெருகும். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் செய்ய திட்டமிடலாம். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்துச் செயல்படுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. புதிய வேலைக்கான தேடல் முடியும். ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மதிப்பு மரியாதை உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிக்கவும்.

விருச்சிக ராசி (Scorpio Zodiac Sign)

ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகள் தரப்பில் இருந்து செய்திகளை பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் எதிர்காலத்திற்கான திட்டமிடலை சிறப்பாக செய்வீர்கள். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் மனதிற்கு திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

மேலும் படிக்க | Jupiter transit: 38 நாட்களில் குரு பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள், பொற்காலம் ஆரம்பம்

கன்னி ராசி (Virgo Zodiac Sign)

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை சாதகமான பலன்களை அளிக்கும். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய திட்டங்களை தொடங்கி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். முதலீடுகள் மூலமாக அதிக லாபம் காணலாம். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. உங்கள் ஆளுமை பண்பு மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | ஏப்ரலில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News