தீபாவளிக்குப் பிறகு விருச்சிக ராசியில் சௌபாக்கிய சங்கராந்தி! சிம்மத்திற்கு நல்லது

Surya Gochar 2023 November: மங்கலான ராசியான விருச்சிகத்திற்கு நகரும் ஒளியின் கிரகம் சூரியன் பெயர்ச்சி யாருக்கு என்ன செய்யும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 4, 2023, 10:51 PM IST
  • விருச்சிக ராசியில் சூரியன் பெயர்ச்சி
  • சூரியனின் மாற்றம் யாருக்கு நல்லது?
  • தீபாவளிக்கு பிறகு வரும் சூரியனின் சஞ்சாரம்
தீபாவளிக்குப் பிறகு விருச்சிக ராசியில் சௌபாக்கிய சங்கராந்தி! சிம்மத்திற்கு நல்லது title=

இந்து மதத்தில் நவகிரகங்களின் நாயகனாக சூரியன் போற்றப்படுகிறார். ஆண்பால் கிரகமான சூரியன், கிழக்கு திசைக்கு அதிபதி. சூரியனின் ராசிப் பெயர்ச்சியின் அடிப்படையில் தான் தமிழ் மாதங்கள் உருவாகின்றன. ஒவ்வொரு ராசியிலும் சூரியனின் பெயர்ச்சி நடைபெறும் சஞ்சாரம் சங்கராந்தி என்று அழைக்கப்படுகின்றன.

ஜாதகத்தில் சூரியனின் நிலையை வைத்துதான் ஒருவரின் ஒளிமயமான வாழ்க்கை அமையும். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருந்தால் அதற்கு மாணிக்கம் அணிய வேண்டும் என்று சொல்வார்கள். சூரியன் ஒருவரின் பெருமை, சுயமரியாதை, பக்தி, சகிப்புத்தன்மை, உறுதிப்பாடு மற்றும் அதிகாரத்திற்கு காரணமாகிறது.

உடல் உறுப்புகளில் இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு காரகர் சூரிய பகவான் தான். நவக்கிரங்களில் நடுநாயகமான சூரிய பகவான் நவம்பர் 17-ம் தேதி சூரியனுக்கான நட்பு கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் ராசியான விருச்சிக ராசிக்கு எ நகர்கிறது. 

நம் வாழ்வின் ஏற்ற தாழ்வுகளுக்கும், நிலையான மாற்றங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் ராசி விருச்சிகம். அதுமட்டுமல்ல,  மறைந்திருக்கும் இருண்ட, இருண்ட ரகசியங்களுக்கான அடையாளமாகவும் இந்த ராசி இருக்கிறது. விருச்சிக ராசியானது கனிம மற்றும் பெட்ரோல் எண்ணெய் மற்றும் எரிவாயு பகுதி, ரத்தினக் கற்கள் போன்ற நிலச் சொத்துக்களுக்கான காரகமாகும். அதுபோலவே நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் விபத்துகள், காயங்கள், மருத்துவ நடைமுறைகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.

மேலும் படிக்க | சனியால் 2025 வரை கோடீஸ்வர யோகம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்​

மங்கலான ராசியான விருச்சிகத்திற்கு நகரும் ஒளியின் கிரகம் சூரியன் பெயர்ச்சி யாருக்கு என்ன செய்யும்?

சௌபாக்கிய சங்கராந்தி - கார்த்திகை
சூரியன் விருச்சிக ராசியில் நுழைவதை சௌபாக்கிய சங்கராந்தி என்று அழைக்கிறோம். அன்று, சூரியனுக்கு பூஜை செய்து தானம் செய்வது நல்லது. செளபாக்கிய சங்கராந்தியன்று உப்பு தானம்  எனப்படும் லவணபர்வத தானம் செய்தால், சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

மேஷம்

குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். உல்லாசப் பயணத்திற்கான வாய்ப்பு உண்டு என்பதால், உற்சாகமான மாதமாக இருக்கும்.

ரிஷபம் 

அன்பான மற்றும் அக்கறையுள்ள இயல்பு வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும்.

மிதுனம்

மனதிற்கு நிறைவான காரியங்கள் நிறைவேறும். வாழ்க்கையில் வசந்தம் வீசும் நேரம் இது என்பதால் மகிச்சியாக இருக்கலாம்.

கடகம் 

குடும்பத்தில் மூத்த உறுப்பினரின் உடல்நிலை கவலையை ஏற்படுத்தும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது கநல்லது.

மேலும் படிக்க | சனி உச்சம்.. தீபாவளிக்கு முன் குபேர யோகம் பெறப்போகும் ராசிகள்

சிம்மம் 

ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உணவில் கவனம் செலுத்தவும். பயணத்திற்கான நேரம் இது. திட்டமிட்டு செயல்பட்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.  

கன்னி 

மனதளவில் பதற்றம் ஏற்படுத்தும் காலமாக இருக்கலாம். வாழ்க்கைத் துணையின் அறிவுரைகளை ஏற்றுக் கொண்டால், வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.  

துலாம்

பயணத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும், மாணவர்கலுக்கு இருந்த சிரமங்கள் நீங்கும். நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்தினால் நிம்மதி நிலைக்கும்.

விருச்சிகம் 

சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. பணவரத்து நன்றாக இருக்கும்.

தனுசு 

வாழ்க்கையில் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். முதலீடு மூலம் லாபம் பெறுவீர்கள்.

மகரம் 

சூரியனின் ராசியில் ஏற்படும் மாற்றம் மகர ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நவம்பர் 18 முதல் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். நல்ல செய்தி கிடைக்கலாம். 

கும்பம் 

தொழில்முறை அல்லது கல்வித்துறையில் உங்கள் முன்முயற்சி முக்கியமானவர்களால் பாராட்டப்படும். மனக்கசப்பை ஏற்படுத்திய சொத்து விவகாரங்கள் சுமுகமாகத் தீரும்.

மீனம் 

தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். அனைத்து விதமான பலன்களையும் சூரிய பகவான் உங்களுக்கு கொடுப்பார்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த ஆண்டு தீபாவளி வாரம் எப்படி இருக்கும்? அன்னை லட்சுமியின் ஆசி பெறும் ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News