ஆண்டியை அரசனாக்கும் விபரீதராஜ யோகம்... பலனை அடையும் ராசிகள் இவை தான்..!

Vipreet Rajyogam Sukran Peyarchi Palangal : மார்ச் 31 அன்று, சுக்கிரன் ஏற்கனவே ராகு சஞ்சரிக்கும், மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் மூலம் மீனத்தில் சுக்கிரன்- ராகு இணைவு உருவாகும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 29, 2024, 06:13 PM IST
  • சுக்கிரன் மார்ச் 31 அன்று, மீன ராசியில் சஞ்சரிக்கிறார்.
  • சுக்கிரன் மகிழ்ச்சி, செல்வம், ஆடம்பரம், அழகு மற்றும் ஆடம்பரத்திற்கு காரணமான கிரகம்.
  • சுக்கிரனும் ராகுவும் நட்பு கிரகங்கள்.
ஆண்டியை அரசனாக்கும் விபரீதராஜ யோகம்... பலனை அடையும் ராசிகள் இவை தான்..! title=

Vipreet Rajyogam Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிரகங்கள் பெயர்ச்சியாகும் போது சில நேரங்களில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படுகின்றது. இந்த கிரக சேர்க்கைகளால் சில சமயங்களில் ராஜயோகங்கள் உருவாகின்றன.

அந்த வகையில், மார்ச் 31 அன்று, சுக்கிரன் ஏற்கனவே ராகு சஞ்சரிக்கும், மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் மூலம் மீனத்தில் சுக்கிரன்- ராகு இணைவு உருவாகும். சுக்கிரன் மகிழ்ச்சி, செல்வம், ஆடம்பரம், அழகு மற்றும் ஆடம்பரத்திற்கு காரண கிரகமாக கருதப்படும் நிலையில் சில ராசிகளுக்கு விபரீதராஜ யோக பலன்கள் கிடைக்கும் 

சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மார்ச் 31ல் சுக்கிரன் பெயர்ச்சியினால் சுக்கிரனும் ராகுவும் இணைகின்றனர், சுக்கிரனும் ராகுவும் நட்பு கிரகங்கள். இது தவிர மீனத்தில் சுக்கிரன் உச்ச பெற்றுள்ளது. சுக்கிரன்-ராகு இணைவு ஏப்ரல் 24 வரை நீடிக்கும். சுக்கிரனும் ராகுவும் மீனத்தில் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள். ராகு-சுக்கிரன் இணைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கடகம் (Cancer)

சுக்கிரனும் ராகுவும் இணைவதால் கடக ராயினர் அதிர்ஷ்டத்துக்கான வீட்டில் சஞ்சரிப்பதால், கடக ராசிக்காரர்கள், அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சம்பளமும் திருப்திகரமான அளவில் கூடும். வேலையில், தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. திடீர் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அமையும். நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் நிறைவடையும். ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும்.

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜாதகத்தின் பத்தாம் வீட்டில் சுக்கிரன் ராகு சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் நிதி ஆதாயத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெறுவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும், குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் முன்னேற்றமும் பணியிடத்தில் அங்கீகாரமும் கிடைக்கும். பண வரவிற்கான சாதகமான நிலை ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களு இப்பொழுது வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் எதிர்காலத்திற்கான திட்டமிடலை சிறப்பாக செய்வீர்கள்.

மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் இடம் மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம்!

கன்னி (Virgo)

கன்னி ராசிக்கு ஏழாம் வீட்டில் சுக்கிரன், ராகு சேர்க்கை நடக்கிறது. இதனால், வாழ்க்கை துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கூட்டு முயற்சியில் ஏதேனும் வேலைகள் நடந்தால் அதில் நல்ல இலாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்,, இது உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடல்ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் கவுரமும் மரியாதையும் கூடும். உங்கள் ஆளுமை மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். 

கும்பம் (Aquarius)

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் ராகுவின் இணைவு மிகவும் சாதகமாக இருக்கும். ஜாதகத்தின் செல்வத்திற்கான வீட்டில் இந்த இணைவு ஏற்படுவதால், நிச்சயமாக எதாவது ஒரு வகையில் நிதி ஆதாயம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் அலுவலகத்தில் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். ஆனால், உங்கள் திறமையினால் இதனை எளிதாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். இதனால் வரும் காலங்களில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கையில் எந்தவித இன்னல்களூம் ஏற்படாது. வீடு, வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | ஏப்ரல் மாத சூரிய கிரகணம் ஏற்படுத்தும் கவலையால் மனம் வருத்தமடையப் போகும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News