சேப்பாக்கம்னா கெத்துதான்... நல்ல கிரிக்கெட்டை கொண்டாடிய ரசிகர்கள் - உணர்ச்சி பெருக்கில் ஆப்கான்

Chepauk Stadium, PAK vs AFG: சேப்பாக்கத்தில் நேற்று வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமின்றி பாகிஸ்தான் அணிக்கும் உற்சாகமூட்டி, போட்டியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 24, 2023, 10:34 AM IST
  • சேப்பாக்கம் நடப்பு தொடரில் நான்கு போட்டிகள் நடைபெற்றுள்ளது.
  • ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக பாகிஸ்தானை ஓடிஐயில் வீழ்த்தி உள்ளது.
  • வீரர்களும் சேப்பாக்கம் ரசிகர்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்தனர்.
சேப்பாக்கம்னா கெத்துதான்... நல்ல கிரிக்கெட்டை கொண்டாடிய ரசிகர்கள் - உணர்ச்சி பெருக்கில் ஆப்கான் title=

Chepauk Stadium, PAK vs AFG: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 10 நகரங்களில் நடைபெறும் இந்த தொடர் கடந்த அக். 5ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நேற்றைய பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டி வரை மொத்தம் 22 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

நீடிக்கும் சஸ்பென்ஸ்

குறைந்தபட்சம் அனைத்து அணிகளும் நான்கு போட்டிகளில் விளையாடிவிட்ட இந்த சூழலில் இந்தியா 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் முறையே 2ஆவது, 3ஆவது, 4ஆவது இடத்தில் உள்ளன. 

இந்த நிலையில், ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யம் கூடுதலாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தையும், நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தியிருந்ததால் பல அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு உருவானது. எந்த அணி முதல் நான்கு இடங்களில் இருந்து அரையிறுதிக்கு தகுதிபெறும் என்ற சஸ்பென்ஸ் கடைசி வரை நீடிக்கும்.

மேலும் படிக்க | வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

ஆப்கனின் வரலாற்று வெற்றி

அந்த வகையில், ஆப்கானிஸ்தான் அணி, நேற்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை (PAK vs AFG) வீழ்த்தி தொடரை இன்னும் சுவாரஸ்யமாக்கி உள்ளது. மேலும், புள்ளிப்பட்டியிலும் ஆப்கானிஸ்தான் 6ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆப்கானிஸ்தான் வெற்றி அந்நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்குமே பெரும் வெற்றி களிப்பை அளித்திருக்கும்.

ஆப்கானிஸ்தான் அணி (Afghanistan National Cricket Team) தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், எதாவது ஒரு காரணத்தால் வெற்றியை மட்டும் தவறவிட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், இம்முறை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியனும் ஓடிஐ தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியையும் ஆப்கானிஸ்தான் வீழ்த்தி அதன் தலைசிறந்த ஆட்டத்திறனை உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

வேற லெவல் வைப்பில் சேப்பாக்

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி ஒருபுறம் இருக்க, அவர்களுக்கு சென்னை ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்பது அளவிட முடியாதது எனலாம். நேற்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு ரசிகர்களும், இரு அணிகளுக்கும் ஆதரவளிக்கும் உள்ளூர் ரசிகர்களும் என சேப்பாக்கம் (Chennai Chepauk Stadium) நேற்று வேற லெவல் வைப்பில் இருந்தது. 

மேலும் படிக்க | இந்திய சுழல் ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் (Paksistan National Cricket Team) ஓப்பனர் இமாம்-உல்-ஹக் அவுட்டாகி வெளியேற கேப்டன் பாபர் என்ட்ரி கொடுத்தார். விக்ரம் வேதா படத்தின் மிரட்டலா பின்னணி இசை ஒலிக்க, சுற்றியிருந்த ரசிகர்கள் 'பாபர், பாபர்...' என கூச்சலிட ஒரு மாஸ் ஹீரோவுக்கான என்ட்ரியை கொடுத்தார் பாபர் அசாம். பார்வையாளர்கள் மத்தியில் இந்திய ஜெர்ஸி அணிந்திருந்தவர்கள், பாகிஸ்தான் ஜெர்ஸி அணிந்திருந்தவர் என அனைவரும் ஒன்றாக பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்து வந்தனர்.

மைதானத்தை வலம் வந்த ஆப்கன் வீரர்கள்

முதலில் பாகிஸ்தானுக்கே அதிக ஆதரவு இருப்பது போல் தோன்றினாலும், ரஷித் கான் 15 ஓவரில் பந்துவீச வரும்போதும் பாபருக்கு சமமாக அவருக்கும் கரகோஷங்கள் எழுந்தன. ஒவ்வொரு பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும், ஏன் விக்கெட்களுக்கும் உள்ளூர் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதே இரண்டாம் பாதியில் குர்பாஸ் - இப்ராஹிம் சத்ரான் ஜோடியின் 100+ பார்ட்னர்ஷிப்பை ஒட்டுமொத்த சேப்பாக்கமே கொண்டாடித் தீர்த்தது எனலாம். இருவரும் அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது, அனைத்து பார்வையாளர்களுக்கும் அவர்களை உற்சாகப்படுத்தினர்.

பாகிஸ்தான் அணிக்கு அகமதாபாத் மைதானத்தில் சில ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் நடந்தாலும் சேப்பாக்கம் கிரிக்கெட்டுக்கான மரியாதை, வீரர்களுக்கான மரியாதையை வழங்கினர் எனலாம். நல்ல கிரிக்கெட்டை கொண்டுவது என்பது சேப்பாக்கத்திற்கு புதிதில்லை என்பது நேற்று மீண்டும் நிரூபணமானது. நபி, ரஷித் கான் (Rashid Khan) உள்ளிட்டோர் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். குறிப்பாக, வெற்றிக்கு பின் ஆப்கன் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வெற்றி வலம் வந்தனர். மேலும், ஆப்கன் வீரர்கள் பேருந்தில் செல்லும்போது லுங்கி டேன்ஸ் பாடலுக்கு நடனமாடி வெற்றியை கொண்டாடிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | பாண்டியா வந்தாலும் இவரை விட்டுறாதீங்க... உலகக் கோப்பையை வெல்ல அவர் ரொம்ப முக்கியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News