ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா - செம கம்பேக்!

சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 12, 2023, 11:21 PM IST
  • ஆசியக்கோப்பையில் அபாரம்
  • இந்திய அணி சாம்பியன்
  • இறுதிப்போட்டியில் மலேசியா வீழ்ந்தது
ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா - செம கம்பேக்! title=

ஆசிய ஹாக்கி தொடர் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் இன்று மோததின. இந்த போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். ஆரம்பம் முதலே மலேசியா அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. அதற்கேற்ப இந்திய அணியின் தடுப்பு அரண்களில் சில தவறுகள் நடந்ததால் அந்த அணி அடுத்தடுத்து கோல்களை அடித்து திகைக்க வைத்தது. முதல் பாதி முடிவில் இந்தியா 1-3 என பின் தங்கியே இருந்தது. அப்போது இந்திய ரசிகர்கள் அனைவருமே மலேசியா தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதினர்.

மேலும் படிக்க | சுரேஷ் ரெய்னாவை பின்பற்றுகிறாரா திலக் வர்மா? ஒப்பீடும் பல ஆச்சரியங்களும்

இரண்டாம் பாதியில் மலேசியா தடுப்புகளில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தும் என்பதால் இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது மிக மிக குறைவாக இருந்தது என யூகிக்கப்பட்டது.  ஆனால் இந்திய அணியின் ஆட்டமே வேறு மாதிரி இருந்தது. மலேசியாவின் தடுப்புகளை உடைக்கும் விதமாக ஆக்ரோஷமான ஆட்டத்தை கையில் எடுத்தது இந்திய அணி. அதற்கேற்ப இந்திய அணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த இந்திய ஹாக்கி அணி 2வது கோலை 45வது நிமிடத்தில் தான் அடித்த்து.

அந்த கோலை கொண்டாடி தீர்ப்பதற்குள் இந்திய அணி அதே நிமிடத்தில் இன்னொரு கோலை அடித்தது அசத்தியது. அதனால் 3-3 என ஆட்டம் சமநிலையை வந்ததடைந்தது. இப்போது தான் இந்திய அணி ரசிகர்களே பெருமூச்சு விட்டனர். அதுவரை இந்திய அணி தோல்வியை தழுவும் என நம்பிக்கொண்டிருந்தவர்கள் இனி வெற்றி பெறலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இன்னும் ஒரு கோலை அடித்தால் இரு அணிகளுக்குமே வாய்ப்பு என்று இருந்த நிலையில், இந்திய அணி அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது. 

ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்து முன்னிலை பெற்றது. அதன்பிறகு இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் ஆசியக்கோப்பை சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக கைப்பற்றி அசத்தியது. 

இந்திய அணியில் மன்பிரீத் சிங், ஜிக்ராஜ் சிங், ஆகாஷ் தீப் சிங் உள்ளிட்டோர் கோல் அடித்து அசத்தினர். இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார்.

மேலும் படிக்க | விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்! ஹர் கர் திரங்கா! தேசியக் கொடியின் அளவு என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News