IPL 2024 : LSG பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கு! 310 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தினால் போதும்

ஐபிஎல் 2024 தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 310 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற வேண்டும். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2024, 04:22 PM IST
  • லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியுமா
  • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு
  • ஆனால் பேரதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே சாத்தியம்
IPL 2024 : LSG பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கு! 310 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தினால் போதும் title=

IPL Playoffs Scenario 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐபிஎல் 2024 இல் பிளேஆஃப்களுக்கான பந்தயத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியேறவில்லை. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 67வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மே 17) இரவு நடைபெறுகிறது. இதில் லக்னோ அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யலாம். அதேநேரத்தில் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. 

மேலும் படிக்க | CSK: ஷாக்கில் சிஎஸ்கே... 5 வீரர்கள் இல்லை - என்ன செய்யப்போகிறார் ருதுராஜ்?

லக்னோ அணிக்கு இருக்கும் வாய்ப்பு

லக்னோ பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் அந்த அணியின் மோசமான ரன்ரேட் -0.787 அதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக லக்னோ அணி முதலில் களமிறங்கினால், உடனடியாக பிளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறிவிடுவார்கள். முதலில் பேட்டிங் செய்தால் மும்பை இந்தியன்ஸ் அணியை 310 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இதன் பிறகு ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேயை வீழ்த்த வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 300 ரன்களை எட்டியதில்லை, அப்படிப்பட்ட சூழ்நிலையில் லக்னோ அதிர்ஷடம் 100 மடங்காக பொழிந்தால் மட்டுமே இப்படியான அதிசயம் நிகழ வாய்ப்பு இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அதிகாரப்பூர்வமாக இப்போட்டிக்குப் பிறகு லக்னோ அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறும்.

லக்னோ - மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர்

 இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே இதுவரை ஐந்து போட்டிகள் நடந்துள்ளன. லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் இரண்டாவது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. முன்னதாக ஏப்ரல் 30-ம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் லக்னோ 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2024 பிளே ஆஃப் அணிகள்

ஐபிஎல் 2024 இல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்), ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) ஆகியவை பிளேஆஃப்களில் தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளன. நான்காவது அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) இடையேயான போட்டிக்குப் பிறகு தீர்மானமாகும்.

இப்போதைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்தை உறுதி செய்துள்ளது. தற்போது 2வது இடத்துக்கு மீதமுள்ள அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு பிளேஆஃப்களில் விளையாட 2 வாய்ப்புகள் கிடைக்கும். டாப்-2 அணிகளுக்கு இடையே குவாலிபையர்-1 போட்டி நடைபெறுகிறது. இதில் தோற்கும் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அது குவாலிஃபையர்-2ல் விளையாட வேண்டும். குவாலிபையர் 2 என்பது ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 3வது, 4வது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும். அந்த சுற்றில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் இரண்டில் ஆடும்.

\

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News