ஆடி முதல் வெள்ளி: 500 கிலோ மஞ்சள் 51 அம்மியில் அரைத்து வழிபாடு

Aadi Friday 2022: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக 500 கிலோ பச்சை மஞ்சள் அம்மியில் அரைத்த பக்தர்கள் வழிப்பாடு செய்தனர்.

Last Updated : Jul 22, 2022, 03:59 PM IST
  • ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம்
  • 500 கிலோ பச்சை மஞ்சளை 51 அம்மிக்கல் வைக்கப்பட்டு பெண் பக்தர்கள் அரைத்தனர்.
ஆடி முதல் வெள்ளி: 500 கிலோ மஞ்சள் 51 அம்மியில் அரைத்து வழிபாடு title=

ஆடி வெள்ளி என்பது தமிழ் மாதமான ஆடியில் (ஜூலை-ஆகஸ்ட்) வரும் வெள்ளிக்கிழமைகளைக் குறிக்கிறது, இது தெய்வீக பெண் சக்தியான சக்தி தேவியை மகிமைப்படுத்துகிறது. ஆடி வெள்ளி கொண்டாட்டம் பருவமழையின் தொடக்கத்தையும் மற்றும் நீர் தெய்வங்களின் சக்தியைக் குறிக்கிறது.  வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆடி மாதம் சூரியன் சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்கு மாறுவதன் மூலம் குறிக்கப்படுகிறது. வானியல் ரீதியாக, சூரியனின் தெற்கு நோக்கி அதன் பயணத்தை குறிக்கிறது, இது தட்சிணாயனம் எனப்படும் நிகழ்வு ஆகும். இந்த தமிழ் மாதம் ஆடி ஆன்மீக முன்னேற்றத்திற்காக சந்திரனின் அதிபதியான தேவியை வழிபட உகந்ததாகும். எனவே, இம்மாதத்தில் திருமணம் மற்றும் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை.

புராணங்களின் படி, ஆடி மாதத்தில் உலகில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட சக்தி தேவி பச்சை அம்மன் தேவியாக காட்சியளித்தார். பச்சை அம்மன் அல்லது கன்னி அம்மன், அவளுடைய உள்ளார்ந்த ஆற்றலால், பல புனித மையங்களில் தோன்றினார், மேலும் அவளுடைய இருப்பு இந்த இடங்களின் தெய்வீக சக்திகளை மேம்படுத்தியது. அவள் திருமுல்லைவாயலில் தோன்றி உலகில் அமைதியையும் வளத்தையும் நிலைநாட்டினாள். திருமணம் மற்றும் கருவுறுதலின் தெய்வம் என்றும் அழைக்கப்படும் அவர், தகுந்த மணமகனை எதிர்பார்க்கும் இளம் கன்னிப் பெண்களுக்கு தனது ஆசீர்வாதங்களைப் பொழிகிறார்.

மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம் 

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக 500 கிலோ பச்சை மஞ்சளை 51 அம்மிக்கல் வைக்கப்பட்டு பெண் பக்தர்கள் அரைத்தனர்.

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிகிழமை அம்மனுக்கு பச்சை மஞ்சள் பூசி அபிஷேகம் செய்து அம்மனை குளிர்வித்தால் விவசாயம் செழித்து அனைத்து மக்களும் சுவிசமாக வாழ்வார்கள் என்பது இப்பகுதி பெண் பக்தர்களின் நம்பிக்கை. 

இதனைத் தொடர்ந்து இன்று மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் 51 அம்மிக்கல் வைக்கப்பட்டு அதில் பெண் பக்தைகள் 500 கிலோ பச்சை மஞ்சளை அரைத்து வருகின்றனர் பெண் பக்தர்களால் அரைக்கப்பட்டது. மேலும் இந்த மஞ்சளை அம்மனுக்கு பூசி அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இந்த அபிஷேகம் செய்வதால் அம்மன் குளிர்ச்சி அடைவார் என்பது அங்கு இருப்பவர்களின் நம்பிக்கை ஆகும்.

மேலும் படிக்க | Lucky Numbers of 22 July: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நாளை சிறப்பு நாள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News