தமிழ்நாட்டில் வரும் 18 ஆம் தேதி வரை இந்த பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு!

Rain Possibilities in Tamil Nādu: தமிழ்நாட்டில் வரும் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 14, 2024, 01:35 PM IST
  • அதிகப்படியான வெயிலின் காரணமாக மழை.
  • தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
  • மே 18 வரை மழை பெய்ய கூடும் என்று அறிவிப்பு.
தமிழ்நாட்டில் வரும் 18 ஆம் தேதி வரை இந்த பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு! title=

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தின் மத்திய பகுதியில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கோடை தொடங்கியவுடன் மேலும் அதிகரித்து பல்வேறு பகுதிகளிலும் வெப்ப அலை வீசியது. இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றுடன் கூடிய இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்காலில் வரும் 18ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு?

தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், தென்காசி, தூத்துக்கு,டி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்தது. தொடர்ந்து வெப்ப அலை வீசிய நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக் கொட்டி தீர்த்தது. 

திடீரென காற்றுடன் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளான விளமல், தண்டலை, அம்மையப்பன், கண்கொடுத்தவனிதம், கமலாபுரம், அடியக்கமங்கலம், சேந்தமங்கலம், திருத்துறைப்பூண்டி, மாவூர், கோமல், கச்சனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை அரை மணிநேரம் மழை கொட்டி தீர்த்தது.  இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து திருவாரூர் பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல கும்பகோணம் பகுதியில் அவ்வப்போது லேசான தூரல் மழை மட்டுமே பெய்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை கும்பகோணம் நகர் மற்றும் சுற்றியுள்ள திருநாகேஸ்வரம், முத்துப்பிள்ளை மண்டபம், செட்டி மண்டபம், கருப்பூர், திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல வெயில் அடித்து வந்த நிலையில் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக பெய்த மழையால் இப்பகுதியில் குளிர்ந்த சூழல் நிலவியது. மேலும், தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் இன்று அதிகாலை 6 மணி முதல் தற்போது வரை சுமார் ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது பெய்து வரும் இந்த ஒரு மணி நேர மழை பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். தற்போது பெய்து வரும் இந்த மழை  தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை அச்சம் அடைய வைத்துள்ளது.

மேலும் படிக்க | ஜெயக்குமார் மரணத்தில் நீடிக்கும் மர்மம்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News