நாமக்கல் : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாத்தா கொலை - பேரன் கைது! பரபரப்பு பின்னணி

நாமக்கல் பகுதிதியில் காதல் விவகாரத்தை கண்டித்ததால் குடும்பத்தையே கொலை செய்ய துணிந்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 3, 2024, 11:09 AM IST
  • நாமக்கல் கல்லூரி மாணவர் கைது
  • சொந்த தாத்தாவை கொலை செய்தார்
  • காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்
நாமக்கல் : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாத்தா கொலை - பேரன் கைது! பரபரப்பு பின்னணி title=

நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது32) என்பவர் நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு எதிரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் கடந்த 30-ந் தேதி நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20), 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40)-வுக்கு கொடுத்துவிட்டு, தேவராயபுரத்தில் வசித்து வரும் தாத்தா சண்முகநாதன் (67) வீட்டிற்கு சென்று அங்கு தாத்தா சண்முகநாதன் மற்றும் குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். அந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நதியா, சண்முகநாதன் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீதமுள்ளவர்கள் சிக்கன ரைஸ் சாப்பிடவில்லை.

மேலும் படிக்க | நம்ம யாத்ரி... கமிஷன் இல்லாமல் கோடி வருவாய் - சென்னையில் கலக்கும் ஆட்டோ செயலி

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கல்லூரி மாணவனின் தாய் நதியா, சண்முகநாதன் ஆகிய இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறியதால் ஜீவானந்தத்தின் உணவகத்திற்கு ஆட்சியர் உமா உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது. ஆனால், ஓட்டலில் கடந்த 30-ந் தேதி சுமார் 100 பேர் சாப்பிட்டு உள்ளனர். ஆனால் அவர்களில் 2 பேருக்கு மட்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், உணவு பாதுகாப்புத்துறையினருக்கும் சந்தேகம் எழுந்தது. அதாவது உணவில் எவ்வித குறைபாடும் இருக்க வாய்ப்பு இல்லை என தெரியவந்தது.

சிக்கன் ரைஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உமா போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்களும் சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து, சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். மேலும் கல்லூரி மாணவர் பகவதி மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகநாதன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். உணவு மாதிரியின் பகுப்பாய்வு முடிவில் உணவில் விஷம் கலந்து இருப்பதும் உறுதியானது. 

இதனையடுத்து போலீசாரின் பார்வை கல்லூரி மாணவர் பகவதி பக்கம் திரும்பியது. அவரை பிடித்து தீவிர விசாரணை செய்தனர். அதில் அவரது காதல் விவகாரத்தை தாய் மற்றும் குடும்பத்தினர் கண்டித்தது தெரியவந்தது. இதனால், உணவில் விஷம் கலந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்து தாய், தாத்தா உள்ளிட்டோருக்கு கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட தாய் இப்போது அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நிலையில், தாத்தா காலமாகிவிட்டார். இதனையடுத்து பகவதியை கைது செய்த நாமக்கல் போலீசார், இந்த வழக்கை கொலை வழக்ககாக மாற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | கோவையில் MyV3Ads சக்தி ஆனந்த் உட்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News