சிறுத்தை நடமாட்டம்: 7 பள்ளிகளுக்கு விடுமுறை.. 4 பள்ளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு..

Leopard Movement in Mayiladuthurai: சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறையில் பொது தேர்வுகள் நடைபெறும் நான்கு பள்ளிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏழு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 4, 2024, 10:04 AM IST
சிறுத்தை நடமாட்டம்: 7 பள்ளிகளுக்கு விடுமுறை.. 4 பள்ளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு..  title=

Mayiladuthurai District News: மயிலாடுதுறை நகரில் சிறுத்தை நடமாட்டத்தை முன்னிட்டு ஏழு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி, ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, ரோட்டரி கிளப் மெட்ரிகுலேஷன் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலைப் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. குறிபார்த்து சுடும் வகையில் எஸ்.எல்.ஆர் வகையைச் சார்ந்த துப்பாக்கி மற்றும் தடுப்பு பலகைகள் ஆகியவற்றுடன் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர் அது மட்டும் இன்றி ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஏழு பள்ளிகளுக்கு விடுமுறை

சிறுத்தை நடமாட்டத்தை குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று கூறுகையில், "சிறுத்தை புலி நடமாட்டம் காரணமாக அச்சுறுத்தல் உள்ள பகுதியைச் சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் நாளையும் (ஏப்ரல் 4) விடுமுறை அளிக்கப்படும் என்றும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை பாதுகாப்புடன் நடைபெறும். மேலும் வனத்துறை சார்பில் கண்ட்ரோல் ரூம் திறக்கப்பட்டு 10 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார்.

தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் தீயணைப்பு துறையினர்..

மயிலாடுதுறை நகரில் நேற்று இரவு நடமாடிய சிறுத்தை புலி காரணமாக பொதுமக்கள் இடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் காவல்துறையினர் வனத்துறையினர் தீயணைப்பு துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க - திண்டுக்கல்: லேகியம் விற்ற மோடி, ஓபிஎஸ், எடப்பாடி இரண்டும் பைத்தியம் - லியோனி

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் வெளியே வர வேண்டாம் -மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

இந்நிலையில் சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட வனஉயிரின காப்பாளர் அபிஷேக் டோமர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "பொதுமக்கள், பெண்கள் இரவில் வீட்டை விட்டு எச்சரிக்கையுடன் வெளியே வரவேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கினார். சம்பந்தப்பட்ட பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் தகவல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் சிறுத்தை இன்னும் பிடிபடாத நிலையில், அச்சத்துக்குரிய பகுதியைச் சார்ந்த ஏழு பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மூன்று பள்ளிகளுக்கு வனத்துறை காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும் பொதுமக்கள் எந்த வித அச்சமும் பட வேண்டாம் என்று கூறினார்.

மேலும் படிக்க - கச்சத்தீவு பிரச்சனை எதிர்காலத்தில் விஷமாக மாறும்... பாஜக கூட்டணி வேட்பாளர் பேட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News