INX Media Case: சிதம்பரம், கார்த்தி உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சிபிஐ தரப்பில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 18, 2019, 02:29 PM IST
INX Media Case: சிதம்பரம், கார்த்தி உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் title=

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் அனுமதி அளித்ததில் முறைக்கேடு நடைபெற்றுள்ளதாக, அதற்கு அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அதற்கு உதவி செய்ததாக கூறி சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. அவர் சிறையில் அடைத்து 40 நாட்களுக்கு மேல் ஆகியுள்ளது. அதாவது காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிட்டத்தட்ட 55 நாட்கள் சிபிஐ மற்றும் நீதித்துறை காவலில் கழித்துள்ளார். இந்தநிலையில், சிபிஐ தரப்பில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமயில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (United Progressive Alliance) மத்தியில் ஆட்சியில் இருந்த போது ப.சிதம்பரம் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தார். சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலத்தில் 2007 ஆம் ஆண்டில் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை கையகப்படுத்த ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (Foreign Investment Promotion Board) ஒப்புதல் அளித்ததில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டிய சிபிஐ (Central Bureau of Investigatio) சிதம்பரத்துக்கு எதிராக 2017 ஆண்டு மே 15 ஆம் தேதி அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

INX media முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதும் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சில நிபந்தனைகளுடன், அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

தற்போது அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் ப.சிதம்பரத்திடம் தினமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. வரும் 24 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தநிலையில், சிபிஐ தரப்பில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Trending News