கார்த்தி சிதம்பரத்தின் கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

பிரதமர் மோடிக்கு நிகரான பாப்புலாரிட்டி ராகுல்காந்திக்கு இல்லை என கார்த்தி சிதம்பரம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 10, 2024, 11:09 AM IST
  • ராகுல்காந்திக்கு எதிராக கருத்து
  • கார்த்தி சிதம்பரம் மீது விமர்சனம்
  • அதிகாரம் இல்லை என பதிலடி
கார்த்தி சிதம்பரத்தின் கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு title=

ராகுல் காந்திக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது அக்கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் மோடிக்கு நிகரான பாப்புலாரிட்டி ராகுல் காந்திக்கு இல்லை என அவர் கூறியது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், தன்னிடம் விளக்கம் கேட்கும் அதிகாரம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் மீண்டும் வெடித்துள்ளது. 

மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு - ஜனவரி 12 கிளைமேக்ஸ்!

கார்த்திக் சிதம்பரம் அளித்த அந்த பேட்டியில், " இப்போதைய சூழலில் மோடிக்கு நிகரான பாப்புலாரிட்டியில் இந்தியாவில் யாரும் இல்லை என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். கார்கே அல்லது ராகுல்காந்தி என யாராக இருந்தாலும், பிரதமர் மோடிக்கு இருக்கும் பிரபலம் மற்றும் அவரின் இமேஜை கொண்டு சேர்க்கும் சோஷியல் மீடியா பவர் மற்றவர்களுக்கு இல்லை. ஆனால் அவரை வீழ்த்த முடியாத தலைவரா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன். 

வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் அடிப்படையில் பார்க்கும்போது கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இதனை வைத்து தான் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து முன்வர வேண்டும்" என தெரிவித்தார். அவரின் இந்த பேட்டி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அதிருப்திக்குள்ளாக்கியது. அவர் எப்படி இப்படியான கருத்துகளை தெரிவிக்கலாம் என கேள்வி எழுப்பியிருந்தனர். அத்துடன் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி இது குறித்து விளக்கம் கேட்டு கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், அவர்களுக்கு தனக்கு நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் இல்லை என கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். "எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை. காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மேலிடத்திற்கே அதிகாரம் உள்ளது. என்னுடைய பேட்டியை முழுமையாக பார்த்தால் நான் என்ன பேசினேன் என்று தெரியவரும்" என்று கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | சிதம்பரம் கனகசபை மீது வழிபாடு நடத்த போராடுவீர்களா அண்ணாமலை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News