ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவுக்கு இ-பாஸ் கட்டாயம்!

Latest News E Pass For Ooty and Kodaikanal Tourists : உதகை மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு இ_பாஸ் கட்டாயம் என திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Apr 29, 2024, 06:44 PM IST
  • சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ்
  • கொடைக்கானல், ஊட்டி சுற்றுலா பயணிகளுக்கான செய்தி
  • சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவுக்கு இ-பாஸ் கட்டாயம்! title=

Latest News E Pass For Ooty and Kodaikanal Tourists : கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட ஈபாஸ் நடைமுறையை உதகை கொடைக்கானலில் மே ஏழு முதல் ஜூன் 30 வரை அமல்படுத்த உத்தரவு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விசாரிக்க கூடிய நீதிபதிகள் முன்பு திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக ஆஜராகி இருந்தார்கள்.

ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தளங்களுக்கு எவ்வளவு வாகனங்கள் செல்லலாம் என்பதை சென்னை ஐஐடி குழு ஆய்வு செய்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோடை விடுமுறை காலத்தில் சுற்றுலா தளங்களுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வாகனங்கள் வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு நாளைக்கு 20000 வாகனங்கள் அங்கு சென்றாள் அப்பகுதியில் நிலை என்ன ஆகும் மேலும் அங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கும் அது இடையூறாக அமையும் மேலும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறிய நீதிபதிகள்.

மேலும் படிக்க | Crime News: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை... சென்னையில் பயங்கரம்!

ஐஐடி ஆய்வு வரும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய நீதிபதிகள் கொரோனா காலத்தில் நடைமுறையில் இருந்தது போல இ பாஸ் முறையை வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்த திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர். 

இ-பாஸ் பெற விண்ணப்பிப்பவர்கள் எந்த வாகனத்தில் வருகிறார்கள் எத்தனை பேர் வருகிறார்கள் எத்தனை நாள் அங்கு இருப்பார்கள் என்ற விபரங்கள் பெறப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இபாஸ் நடைமுறைக்கு உள்ளூர் பொதுமக்களுக்கு விலக்களிக்க வேண்டும் எனவும் இரு மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | பெண்கள் குறித்து ஆபாசக் கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News