முன்னாள் மாணவர்களால் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பொலிவு பெறும் அரசு பள்ளி!

கோவில்பட்டி அருகே உள்ள  இளையரசனேந்தல் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இந்தப் பள்ளி 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : May 18, 2024, 06:06 PM IST
  • முன்னாள் மாணவர்கள் செய்த நற்செயல்
  • 30 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்படும் பள்ளி
  • மக்கள் நெகிழ்ச்சி
முன்னாள் மாணவர்களால் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பொலிவு பெறும் அரசு பள்ளி!  title=

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள  இளையரசனேந்தல் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இந்தப் பள்ளி 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் தற்போது 350 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கும் மரிய செல்வி என்பவர் இங்கு பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளியின் வளர்ச்சி மற்றும் தரத்தை மேம்படுத்தும் வகையில் whatsapp குழு ஒன்றை உருவாக்கி உள்ளார்.

அந்தக் குழுவில் இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இடம் பெற்றுள்ளனர்.  பள்ளியின் வளர்ச்சி குறித்து  ஆலோசனைகளை வழங்கியது மட்டுமின்றி முன்னாள் மாணவர்கள் பள்ளி நேரில் வந்து பார்த்துள்ளனர். பள்ளியில் இருந்த பல கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து சேதமடைந்த கட்டிடங்களை புதுப்பிக்கவும், பள்ளிக்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை வாங்கி கொடுக்கவும்  முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து முடிவு செய்தனர்.

மேலும் படிக்க | சென்னை : கேமராவுக்கே டிமிக்கி கொடுத்து கொள்ளையடித்த பலே திருடர்கள்! துணிகர கொள்ளை லேட்டஸ்ட் அப்டேட்

சுமார் முப்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடங்கள் சீரமைப்பு,  பள்ளிக்கு புதிய கலையரங்கம் மற்றும் வகுப்பறைகளுக்கு ஒலிபெருக்கி வழங்க முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக பள்ளியில் சேதமடைந்துள்ள கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள் மற்றும் வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இந்தப் பணிகளை முன்னாள் மாணவர்கள் இன்று ‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்து வரும் 25ஆம் தேதி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா  நடைபெற உள்ளது. 

இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொருளாளர் ஜெயபாரதி கூறுகையில் ‌ எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் முயற்சியால்  முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்துள்ளோம். எங்கள் பள்ளிக்கு வந்து பார்த்தபோது பல கட்டடங்கள் சேதம் அடைந்திருந்தது. இதையடுத்து நாங்கள் அனைவரும் ஒன்றாக பேசி முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நிதி உதவி செய்து வருகின்றனர். சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடப் பணிகள் புதுப்பிப்பு மற்றும் புதிய கலையரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளோம். வரும் 25ம் தேதி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். 

பள்ளி தலைமை ஆசிரியை மரியச்செல்வி கூறுகையில் ‌ தமிழக அரசின் ஆலோசனைப்படி முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்ததாகவும், பள்ளி வளர்ச்சி, பள்ளி கட்டிடங்கள் சீரமைப்பு, பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் முன்னாள் மாணவர்கள் மேற்கொண்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

மேலும் படிக்க | சென்னையில் கெட்டுப்போன பீட்சா வாங்கிய கர்ப்பிணி பெண்! மகள், பாட்டிக்கு தீவிர சிகிச்சை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News