10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: இரட்டையர்கள் காட்டிய ஒற்றுமை - அதுவும் 2 மாவட்டங்களில்!

SSLC Public Exam Result 2024: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அதில் திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இரட்டையர் ஜோடிகள் ஒரே மதிப்பெண்ணை எடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

Written by - Sudharsan G | Last Updated : May 10, 2024, 10:48 PM IST
  • 10ஆம் வகுப்பு தேர்வை மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் எழுதினர்.
  • இந்தாண்டு 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • 10ஆம் வகுப்பில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றது.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: இரட்டையர்கள் காட்டிய ஒற்றுமை - அதுவும் 2 மாவட்டங்களில்! title=

SSLC Public Exam Result 2024 Twins With Same Marks: தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் வெளியிடப்பட்டது. அதில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள சூளைப் பகுதியில் இருக்கும் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகமணி (39).  இவரது கணவர் முத்துக்குமரன் கடந்த 10 ஆண்டுகள் முன்பு உயிரிழந்துவிட்டார். முருகமணி பனியன் கம்பனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். எம்.ஹரிணி மற்றும் எம்.சபரி ஸ்ரீ என இரட்டையர்களான மகள்களுடன் வசித்து வருகிறார்.

எம்.ஹரிணி மற்றும் எம்.சபரி ஸ்ரீ ஆகிய இரட்டை சகோதரிகள் அவிநாசியில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து இந்தாண்டு தேர்வு எழுதினர். அந்த வகையில், இன்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இரட்டையர் சகோதரிகள் இருவரும் 484 மதிப்பெண்கள் எடுத்து அசத்தினர். 
       
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, காலை 4 மணி முதல் படித்தும், ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், தாயாரின் அரவணைப்பாலும், ஊக்கத்துடன் நன்றாக படித்ததால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இருவரும் ஒரே மாதிரியாக 484 மதிப்பெண்களை பெற்றுள்ளோம். மேலும் மேற்படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று எங்கள் தாயாரை நல்லபடியாக பார்த்துக் கொள்வோம்" என்றனர்.

மேலும் படிக்க | Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இதேபோல், நாமக்கல் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ்யுவராஜா -  கலைராணி தம்பதியினர். இவர்களுக்கு அட்சயா, அகல்யா என இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இருவரும் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து இந்தாண்டு தேர்வை எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவில் அட்சயா, அகல்யா ஆகிய இருவரும் 463 மதிப்பெண்களை பெற்றனர். இரட்டையர் இருவரும் ஒரு மதிப்பெண்களை பெற்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, திருப்பூர், நாமக்கல் என இரண்டு மாவட்டங்களை சேர்ந்த இரண்டு இரட்டையர் ஜோடிகள் ஒரே மதிப்பெண்ணை பெற்றுள்ளனர்.

நாமக்கலில் மேலும் ஒரு ஆச்சர்யம்

அதே நாமக்கல் மாவட்டத்தின் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பில் பயிலும் 3 இரட்டையர் சகோதர, சகோதரிகள் பயின்று வருகின்றனர். இதில் மோனிகா (488), மோனிஷா (477), ஹவின் (456), ஹாசன்(405), அதேபோல கிரிஷ்யா (446) கிரிஷ்மதி (409) என 3 இரட்டையர்களும்  400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று அசத்தியுள்ளனர். 

பின்னர் 3 இரட்டையாளர்க்களும் பள்ளி தாளாளர், ஆசிரியர் என மாணவ மாணவிகளுக்கு இணைப்புகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். மோனிகா, மோனிஷா என்ற மாணவிகள் பள்ளியில் 2ம் இடமும், 4ம் இடமும் பெற்றனர்.

ஒரு மார்க் வித்தியாசம்...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் இரட்டை குழந்தைகளாய் பிறந்த சகோதரிகள் 10 வகுப்பு பொது தேர்வில் ஒரு மார்க் வித்தியாசத்தில் மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். கணியூர் ஸ்ரீ வெங்கிட  கிருஸ்னா பள்ளியில் இரட்டை சகோதிரிகளான ஆயிசா லுபாபா, ஆயிசா உமாமா ஆகியோர் படித்தனர். 

இதில், ஆயிசா லுபாபா 418 மதிப்பெண்களையும், ஆயிசா உமாமா 417 மதிப்பெண்களையும் எடுத்தனர். இருவருக்கும் இடையே 1 மதிப்பெண்தான் வித்தியாசம். இந்நிலையில் இரட்டை சகோதரிகளுக்கு பள்ளியின் தாளாரர் கே.ஈஸ்வரசாமி தலைமையில் பரிசு பொருட்கள் அளித்து பாராட்டு தெரிவித்த பள்ளி நிர்வாகத்தினர் பள்ளியின் முதல் மூன்று இடம் மற்றும் குறிப்பிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் அளித்து பாராட்டு தெரிவித்தனர். 

மேலும் படிக்க | 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : அதிக மதிப்பெண், அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டம் முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News