கைலாசாவிலும் கைவரிசை காட்டுகிறார் நித்தி : புகார் அளித்த வெளிநாட்டு பெண்..!

நித்யானந்தா தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டை சேர்ந்த பெண் சாரா லான்ட்ரே மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். 

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 24, 2022, 12:46 PM IST
  • தொடரும் நித்தியின் பாலியல் குற்றம்
  • புகார் அளித்த வெளிநாட்டு பெண்
  • போலீஸாரின் நடவடிக்கை என்ன.?
கைலாசாவிலும் கைவரிசை காட்டுகிறார் நித்தி : புகார் அளித்த வெளிநாட்டு பெண்..! title=

பாலியல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளவர்  நித்தியானந்தா . இவர், கைலாசா என்ற தனி நாட்டை உருவாகி அவ்வப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வந்தார். இதற்கிடையே தேடப்படும் குற்றவாளியாக உள்ள நித்தியை, இந்திய போலீஸார் வலைவீசி தேடி வந்தனர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அந்த அளவுக்கு தொழில்நுட்பத்தில் தேர்ந்த ஆட்களை தன் பக்கம் வைத்து காய் நகர்த்தி வருகிறார் நித்தி என பலரும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க கடந்த 2019ஆம் ஆண்டு வெளிநாட்டை சேர்ந்த சாரா லாண்ட்ரே என்ற இளம் பெண் நித்தியானந்தா மீது பாலியல் புகார் அளித்து சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். நித்தியின் முன்னாள் சீடராக இருந்த லாரா, அவர் தொடர்பான பாலியல் புகார்களை ஆதாரத்துடன் கூறியது அப்படி ஒன்றும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. இது நித்திக்கு வழக்கமான ஒன்றுதான். வடிவேலு பஞ்சாயத்து காமெடியில் வரும் என்னப்பா 18 பட்டியும் வந்தாச்சா.. அப்புறம் நாலு பேரு விட்டு போச்சு அஞ்சு பேரு விட்டுப்போச்சுன்ற கதையே இங்க இருக்கக்கூடாது என சொல்லி அடி உதை வாங்கி பையில் இருந்து புது சட்டையை கெத்தாக எடுத்து மாட்டிக்கொண்டு செல்வார்.

மேலும் படிக்க | Contraceptive pill for men: ஆண்களுக்கு 99 சதவிகிதம் பயனளிக்கும் கருத்தடை மாத்திரைகள்

இது போன்று பல பஞ்சாயத்துகளை நிஜத்தில் சந்தித்தவர் நித்தி. எது எப்படியோ நித்தியை விட முடியாது அவர் செய்து வரும் குற்றங்களை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவேண் என விடா பிடியாக இருக்கும் சாரா லாண்ட்ரே, கைலாசாவில் நித்தி தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக கர்நாடக மாநில போலீஸாருக்கு இ.மெயில் மூலம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பார்த்த அம்மாநில காவல்துறை உயர் அதிகாரிகள், யாருக்கும் பயப்படாமல் நேரில் வந்து புகார் அளியுங்கள் உங்கள் பக்கம் நாங்கள் இருக்கிறோம்... குற்றவாளி நித்தியை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு  வருவதாக சாராவுக்கு பதிலளித்துள்ளனர்.

இது தொடர்பான தகவல்கள் அனைத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சாரா, தனது விக்கிபீடியா பக்கத்தை யாரோ இயக்கி அதில் உள்ள தகவல்களை மாற்றி அமைப்பதாக புகார் அளித்துள்ளார். உலக அளவில் கை தேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை கையில் வைத்துள்ள நித்திக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல என்ற நிலை இருந்தாலும் நித்தியை பிடிக்க அதிகாரிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்விதான் அனைவரது மனதிலும் எழுகிறது. 

மேலும் படிக்க | Deltacron: விசா இல்லாமல் இந்தியாவிற்குள் எண்ட்ரியான டெல்டாக்ரான்! மீண்டும் பாதிக்கும் வைரஸின் புதிய அவதாரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News