கற்பழிப்பு முயற்சியில் பயங்கரம் - 5 மாத கர்ப்பிணி படுகொலை

கோவையில் கர்ப்பமாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - S.Karthikeyan | Last Updated : Feb 5, 2022, 07:29 PM IST
  • கர்ப்பிணி பெண் கொடூர கொலை
  • மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல்
  • காமூகர்களை தேடும் போலீஸ்
கற்பழிப்பு முயற்சியில் பயங்கரம் - 5 மாத கர்ப்பிணி படுகொலை title=

கோவை சுங்கம் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள முட்புதர்கள் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தால் அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. நேற்று மாலை அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் நேரில் சென்று பிணத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ALSO READ | ஆசிரியர் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை
 
பிணமாக கிடந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும். இவர் கடந்த சில மாதங்களாக சுங்கம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்து வீடுகள் முன்பு காயப்போட்டு இருக்கும் துணிகளை எடுத்து அணிந்து கொள்வதை அந்த பெண் வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால் அந்த பகுதிக்கு அவர் பரிச்சயமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார் அவரது தலையில் கால் பகுதி மற்றும் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. அவரை யாரோ தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்தப் பெண் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார் மனநிலை பாதிக்கப்பட்ட அவரை யாராவது கற்பழிப்பது அவர் கர்ப்பமாகி இருக்கலாம் என்ற சந்தகேம் எழுந்துள்ளது.

ALSO READ | தம்பியைக் கொன்ற சகோதரர்கள்! குடும்பத் தகராறில் கொடூரக் கொலை

மேலும், கற்பழிப்பு முயற்சிக்காக அந்த பெண்ணை மர்மநபர்கள் கடத்தி சென்றபோது, அவர் ஆசைக்கு இணக்க மறுத்திருந்திருக்கலாம். இதனால், ஆத்திரத்தில் மர்மநபர்கள் அவரை கொடூரமாக தாக்கி கொன்று இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸூக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல் கட்டமாக உங்கள் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த பெண்ணை யாராவது அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதா? என பார்வையிடும் காவல்துறையினர், அப்பகுதியில் சுற்றித்திரியும் ரவுடிகளையும், போதை நபர்களையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News