இளையராஜா அனுப்பப்பட்ட சம்மன்! காரணம் இதுதான்

இளையராஜா பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதன் காரணம் அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது தான் காரணம் என்று சில செய்திகள் பரவி வருகிறது.

Written by - RK Spark | Last Updated : Apr 20, 2022, 12:08 AM IST
  • இளையராஜா மோடியை புகழ்ந்து முன்னுரை எழுதி இருந்தார்.
  • இவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.
  • தற்போது வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பு உள்ளது.
இளையராஜா அனுப்பப்பட்ட சம்மன்! காரணம் இதுதான் title=

சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டிங் டாப்பிக்க்காக ஓடிக்கொண்டிருப்பது இளையராஜாவின் கருத்து தான். அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடியை ஒப்பிட்டு ஒரு புத்தகத்தில் இளையராஜா முன்னுரை எழுதியது தான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. இவரை ஆதரித்து பலரும், வசைபாடி பலரும் இணையத்தில் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இளையராஜாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கப்போகிறது அதனால் தான் இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்று பலரும் பலவிதமான யூகங்களை கூறினர். அதனைத்தொடர்ந்து இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவும் பயங்கர ட்ரெண்டிங்கானது.

மேலும் படிக்க |  பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் இளையராஜா..! அதுவும் எந்த ரூட்டில் தெரியுமா?

இந்நிலையில் லேட்டஸ்டாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருப்பது என்னவென்றால், இளையராஜா மோடியை புகழ்ந்தது சில விஷயங்களிலிருந்து தப்பிக்க தான் என்று செய்திகள் பரவியுள்ளது. அதாவது வணிக வரித்துறையில் இருந்து இளையராஜாவிற்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாம், அதிலிருந்து தப்பிக்க தான் இவர் மோடியை காக்கா பிடிக்கிறார் என்று பேச்சு எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதியன்று அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனில் வரும் மார்ச்-19 அன்று காலை 11 மணியளவில் நீங்கள் சென்னையிலுள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வணிக வரித்துறை குறிப்பிட்ட கால அவகாசத்தின்படி இளையராஜா நேரில் ஆஜராகவில்லை போலும், அதனை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக மார்ச்21ம் தேதி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது, அதில் மார்ச்-28 அன்று காலை 11 மணியளவில் நீங்கள் சென்னையிலுள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று இருந்தது. இதனை வைத்து பார்க்கும்பொழுது இந்த பிரச்சனையில் தான் சிக்கிக்கொள்ளாமல் இருக்க தான் இளையராஜா இவ்வாறு மோடிக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் என்று சூடாக செய்திகள் பரவி வருகிறது.

மேலும் படிக்க | இளையராஜாவுக்கு எதிராக மகன் யுவன்சங்கர்ராஜா சர்ச்சை பதிவு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News