ஏசி ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கிறது? 99% பேருக்கு இந்த ரகசியம் தெரியாது!

இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் கொடூரமாக இருப்பதால் இந்த சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் ஏசி வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : May 27, 2023, 10:36 AM IST
  • விண்டோ ஏர் கண்டிஷனர் ஒற்றை அலகு கொண்டது.
  • ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனர் இரண்டு தனித்தனி அலகுகளை கொண்டது.
  • வெள்ளை நிற ஏசி யூனிட் வெப்பத்தை குறைவாக உறிஞ்சுகிறது.
ஏசி ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கிறது? 99% பேருக்கு இந்த ரகசியம் தெரியாது! title=

இந்தியாவில் கோடைக்காலத்தில் ஏர் கண்டிஷனர் மற்றும் ஏர் கூலர்களை பயன்படுத்துவது சாதாரண ஒன்றாகிவிட்டது.  மக்களை கவர்வதற்காகவே நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன், சந்தையில் பல வகையான ஏசிகள் விற்பனைக்கு கிடைக்கின்றன, இததகைய ஏசிகள் விலை மலிவானதாகவும் மற்றும் மின்சாரத்தை சேமிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.  அதிலும் இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் கொடூரமாக இருப்பதால் இந்த சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் ஏசி வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  ஏர் கண்டிஷனர்கள் இரண்டு முக்கிய வகைகளில் கிடைக்கின்றன, ஒன்று ஸ்பிளிட் ஏசி மற்றொன்று விண்டோ ஏசி ஆகும்.  ஏசிகளில் எத்தனை வகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் புகுத்தப்பட்டாலும் வெள்ளை நிறத்தில் மட்டும் தான் ஏசிகள் வருகிறது, இதற்கான காரணம் என்ன என்பது பற்றி நாம் இதுவரை யோசித்திருக்க மாட்டோம்.

மேலும் படிக்க | டிவிட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராமில் வரும் புது அம்சம்..!

விண்டோ ஏர் கண்டிஷனர் ஒற்றை அலகு கொண்டது மற்றும் அது விண்டோ பகுதியில் நிறுவப்பட்டுள்ளது, இந்த அலகு சுற்றுச்சூழலுடன் நன்றாகக் கலக்கும் வகையில் வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதேசமயம், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர்களில் அறையின் உள்ளே நிறுவப்பட்டுள்ள உட்புற அலகு மற்றும் வெளியே நிறுவப்பட்ட வெளிப்புற அலகு என இரண்டு தனித்தனி அலகுகளை கொண்டுள்ளது.  பொதுவாக, ஏசியின் வெளிப்புற யூனிட்டின் நிறம் வெண்மையாக இருக்கும், அதே சமயம் உட்புற யூனிட்டின் நிறம் வேறுபட்டிருக்கலாம்.  பொதுவாக வெள்ளை நிறம் சூரிய ஒளியின் அதிகபட்ச அளவை பிரதிபலிக்கிறது மற்றும் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது.  வெள்ளை நிறம் அல்லது வெளிர் நிறம் சூரிய ஒளி அல்லது வெப்பத்தை பிரதிபலிக்கிறது.  எனவே வெள்ளை நிறம் பயன்படுத்தப்படுவதால் வெப்பத்தை உறிஞ்சுவது குறைவாக உள்ளது மற்றும் ஏசி அலகு குறைவாக வெப்பமடைகிறது.

வெள்ளை நிற ஏசி யூனிட் வெப்பத்தை குறைவாக உறிஞ்சுகிறது, இந்த நிறம் அதன் வெளிப்புற பாதுகாப்பு கோட்டை மட்டுமே பாதிக்கிறது.  கம்ப்ரஸர், கண்டன்சர் மற்றும் எவாப்பரேட்டர் போன்ற உள் கூறுகளின் வெப்பத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.  வெயில் இல்லாமல் நிழலில் ஏசி அலகுகள் நிறுவப்பட்டால், குளிர்ச்சிக்காக அவை குறைவாக வேலை செய்யும், நேரடியாக சூரிய ஒளியில் இருந்தால் நீண்ட நேரம் வேலை செய்ய்ய வேண்டியிருக்கும்.  நிழலில் இருப்பதால் அதிக குளிர்ச்சியும் கிடைக்கிறது மற்றும் குறைவாக வேலை செய்வதால் மின்சார கட்டணமும் சேமிக்கப்படுகிறது.

மேலும் ஏசி வெப்பநிலையை குறைவாக அமைப்பதன் மூலம் அறையை வேகமாக குளிர்விக்க ஏசி அனுமதிக்கிறது என்று சிலர் நம்புகின்றனர், ஆனால் அது அப்படியில்லை.  பொதுவாக 24 டிகிரி என்பது மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை.  எனவே உங்கள் ஏசியின் வெப்பநிலையை 24 டிகிரியில் வைத்திருப்பது உங்கள் அறையை வசதியாக மாற்றுவது மட்டுமல்லாமல், ஏசியின் சுமையையும் குறைக்கும்.  இதனால் உங்கள் ஏசி ஆற்றல் மிகுந்ததாகவும், குறைந்த மின்சார சக்தியைப் பயன்படுத்துவதாகவும் இருக்கிறது. 

ஏசி பொருத்தப்பட்டுள்ள உங்கள் அறை நேரடியாக சூரிய ஒளிப்படும்படி அமைந்து இருந்தால், அறையை குளிர்விக்க ஏசி-க்கு அதிக நேரம் எடுக்கும்.  அடுத்ததாக நீங்கள் ஏசியை அணைத்த பிறகு அந்த அறை நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்காது.  எனவே, ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு கொஞ்சம் கனமான திரைச்சீலைகள் போட்டு அறைக்குள் சூரிய ஒளி நேரடியாக படாமல் இருக்க செய்வதன் மூலம் உங்கள் அறை நன்கு குளிர்ச்சி அடையும்.  இதனால் அறையில் சூரிய வெப்பம் குறைவது மட்டுமின்றி, ஏசியின் செயல்திறனும் மேம்படும், இது ஒரு பயனுள்ள முறையாகும் மற்றும் இது உங்கள் அறையை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் மாற்ற உதவுகிறது.

மேலும் படிக்க | விற்பனையில் சரித்திரம் படைத்த ஐபோனை வெறும் ரூ. 9,140-க்கு வாங்குவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News